Categories: சினிமா

எங்க கிட்ட Proof இருக்கு.. மார்க் ஆண்டனி படத்திற்கு வந்த சிக்கல்.. நடிகர் விஷாலின் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

Spread the love

ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான மார்க் ஆண்டனி படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 15-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

ரிலீசான 9 நாட்களில் படம் 82 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் விஷால் மும்பை மத்திய திரைப்பட தணிக்கை குழு மீது குற்றம் சாட்டி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் மார்க் ஆன்டனி படத்தின் ஹிந்தி மதிப்பிற்கு “CBFC” சான்றிதழ் பெற 6.5 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டியிருந்தது. ஊழலை சகித்துக் கொள்ள முடியாது. அதுவும் அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழலை சகித்துக் கொள்ளவே முடியாது.

கடந்த வாரம் படம் வெளியானது. முன்னதாக CBFC சான்றிதழ் பெறுவதற்கு மும்பையில் இருக்கும் திரைப்பட சான்றிதழ் அலுவலகத்திற்கு படத்தை அனுப்பினோம். ஆனால் அவர்கள் 6.5 லட்சம் கொடுத்தால் தான் படத்தை வெளியிட முடியும் என கூறியதால் திரையிடலுக்கு 3 லட்சம், சான்றிதழுக்கு 3.5 லட்சம் என இரண்டு பரிவர்த்தனைகளாக பணத்தை கொடுத்தோம். கடைசி நேரத்தில் இந்த சிக்கல் வந்ததால் எங்களுக்கு வேற வழி தெரியவில்லை.

அதன் பிறகு தான் மார்க் ஆண்டனி படம் ஹிந்தியில் வெளியானது. இது போன்ற மோசமான அனுபவத்தை என் வாழ்வில் நான் எதிர்கொள்ளவே இல்லை. நாங்கள் கொடுத்த பணத்திற்கான பரிவர்த்தனை பற்றிய விவரங்களை கொடுத்துள்ளேன். இதனை மகாராஷ்டிராவின் முதலமைச்சர் மற்றும் எனது பிரதமர் நரேந்திர மோடி கவனத்திற்கு கொண்டு செல்கிறேன். இனி எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் இந்த ஒரு சூழல் வந்து விடக்கூடாது. இதுபோல வேறு யாருக்கும் இனிமேல் நடக்க கூடாது என கூறியுள்ளார்.

admin

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

26 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

1 மணத்தியாலம் ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

2 மணத்தியாலங்கள் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago