லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கௌதம் மேனன் உள்பட பலன் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து ஆனதால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.
ஆனால் அடுத்தடுத்து படம் குறித்து அப்டேட்டுகள் வந்து கொண்டே இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே படம் LCU-வில் இணைந்துள்ளதா இல்லையா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால் அது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் லோகேஷும், நடிகர் கமலஹாசனும் சென்னை பிரபல டப்பிங் ஸ்டூடியோவில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தின் அறிமுக காட்சிகளில் கமலஹாசன் பேசியுள்ளாரா? அல்லது LCU-வில் இணையும் வகையில் அவர் டப்பிங் பேசிய உள்ளாரா என்பது தெரியவில்லை. டப்பிங் பேச வந்திருந்த கமல்ஹாசனை விஜய் நேரில் வந்து பார்த்ததாக தெரிகிறது. மேலும் கமலின் டப்பிங் பணிகளை விஜய் ரசித்து பார்த்து ரசித்து கொண்டிருந்ததாகவும் செய்திகள் வலம் வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…