வங்கதேசத்தில் பயணிகள் சென்ற பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால், இந்த மரண பிடியில் இருந்து ஒரு பச்சிளம் குழந்தை மட்டும் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளது. அந்த உயிர் பிழைப்பிற்குப் பின்னால் ஒரு தாயின் உன்னதமான தியாகம் ஒளிந்திருக்கிறது. பேருந்து ஆற்றுக்குள் மூழ்கிய அந்த இக்கட்டான தருணத்தில், உயிருக்குப் போராடிய தாய், தனது உயிரைப் பொருட்படுத்தாமல் தண்ணீருக்கு அடியிலிருந்து தனது குழந்தையை மட்டும் மேலே தள்ளிவிட்டுள்ளார். தாயின் அந்த கடைசி முயற்சியால் குழந்தை நீரின் மேற்பரப்பிற்கு வந்து கரை சேர்ந்துள்ளது. ஆனால், அந்த வீரத்தாய் மற்றவர்களுடன் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தார்.
ஆற்றின் கரையில் அமர்ந்து தனது தாய் எங்கே என்று தெரியாமல் அந்த குழந்தை அழுதுகொண்டிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அந்தத் தாயின் தியாகத்தைப் போற்றி வருகின்றனர். மிகவும் சோகமான இந்த விபத்து, ஒரு தாயின் அன்பு மரணத்தை விடவும் வலிமையானது என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…