பாம்பு கடியால் உயிரிழந்த 10 வயது சிறுவன்… உயிர் பிழைக்க கருப்பு மந்திரம் கூறி புதைத்த உடலை தோண்டி… 4 நாட்களாக குடும்பம் செய்த அதிர்ச்சி செயல்…!

Spread the love

இந்தியாவில் கிராமப்புறங்களில் இன்றும் மூட பழக்க வழக்கங்கள் பின்பற்றப்பட்டு வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. அதனால் அடிக்கடி பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. அதன்படி உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் இடர்ணி கிராமத்தில் வசித்து வரும் பத்து வயது சிறுவன் கபில் பாம்பு கடியால் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இருந்தாலும் அவருடைய குடும்பத்தினர் சிறுவன் உயிரிழந்ததை ஏற்க மறுத்து விட்டன. மருத்துவ அறிக்கைகள் தெளிவாக இருந்த போதும் அவர்கள் கருப்பு மந்திரம் நம்பிக்கையில் நான்கு நாட்கள் உடலை வீட்டில் வைத்திருந்தனர். குடும்பம் பல தாந்திரீகர்களை அழைத்து வந்து மந்திர சடங்குகளை நடத்தியுள்ளனர்.

ஏற்கனவே புதைக்கப்பட்ட உடலை மீண்டும் தோண்டி எடுத்து உயிர்பிக்க முயற்சித்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில் கிராம மக்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் நிகழ்ந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. அறிவியல் ஆதாரமற்ற நம்பிக்கைகள் சமூக ஆரோக்கியத்திற்கு மற்றும் பாதுகாப்புக்கு எவ்வளவு ஆபத்தானவை என்பதை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது.

 

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

5 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

5 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

5 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

6 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

6 மணத்தியாலங்கள் ago