Connect with us

CINEMA

ரஜினிகாந்த் சங்கி இல்லைனு கத்திய ஐஸ்வர்யா ரஜினி.. அக்மார்க் சங்கி-னு ஆதாரத்தை வெளியிட்ட ப்ளூ சட்டை மாறன்..

பாஜகவை தீவிரமாக ஆதரிக்கும் நபர்களை சமூக வலைதளங்களில் சங்கி என பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் பாஜக மற்றும் மோடி ஆகியோருக்கு ஆதரவாக பல கருத்துகளையும் தெரிவித்து வந்தார். அத்தோடு பல எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் ரஜினி கலந்து கொண்ட நிலையில், அவரும் சங்கி தான் என பலரும் கலாய்த்து வந்தனர். இந்த நிலையில் தனது தந்தை ஒரு சங்கி இல்லை என, லாம் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவரது மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமாக கூறியிருந்தார்.

#image_title

   

இந்த நிலையில் தான் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், தனது எக்ஸ் தள பதிவில் அவர் சங்கி இல்லை எனவும் அதற்கு இது தான் ஆதாரங்கள் எனவும் சில பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அண்ணத்த படத்தில் இருந்தே ரஜினி ரசிகர்களுக்கும் ப்ளூ சட்டைக்கும் எக்ஸ் தளத்தில் பனிப்போர் சென்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில், ஐஸ்வர்யாவின் இந்த கருத்திற்கு ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

#image_title

* Demonetization வந்தபோது Hats off Modi ji. New India is born எனக்கூவினேன்.
* மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், மற்றும் அர்ஜுனர் போன்றவர்கள் என்றேன்.
* பத்மவிபூஷன், தாதா சாஹேப் பால்கே விருதுகளை இந்த ஆட்சியில்தான் வாங்கினேன்.
* கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டபோது.. கொடியில் தாமரை சின்னத்தை வைத்தேன். கடும் எதிர்ப்பு கிளம்பியதும் தாமரையை நீக்கினேன்.
* தலித் மற்றும் இஸ்லாமியர்களின் ஆதரவைப்பெற காலா, கபாலி, லால் சலாம் படங்களில் நடித்தேன்.
* பாஜக/இந்துத்வா ஆதவாளர்களான துக்ளக் குருமூர்த்தி, அர்ஜுன மூர்த்தி ஆகியோரை ஆலோசித்து அரசியல் கட்சி முடிவுகளை எடுத்தேன்.
* துக்ளக் படிப்போருக்கு மூளை ஜாஸ்தி என்றேன்.
* உலக அரசியல் இல்லாத ‘ஆன்மீக அரசியல்’ எனும் தத்துவத்தை கண்டுபிடித்தேன்.
* மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விஷயங்களில் பலத்த மௌனம் காத்தேன்.
* மாமிசம் சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடு என்றேன்.
* போராட்டம் செய்த மக்களை ஷமூக விரோதி என்றேன்.
* காலம் காலமாக திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகப்பகுதிகளில் பிரசித்தி பெற்ற சித்தர்கள் இருந்தும்… குடுகுடுவென உ.பி.க்கு ஓடிப்போய் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தேன்.
* ராமர் கோவிலுக்கு அழைப்பு வந்ததும் முதல் ஆளாக ஓடிப்போய் முதல் வரிசையில் அமர்ந்து மோடிக்கு கும்பிடு போட்டேன்.
* இப்படி இன்னும் பல சாகசங்கள் செய்து வருகிறேன். இனியும் செய்வேன்.
ஆகவே… நான் சங்கி இல்லை. லால் சலாம் படத்தை வெற்றியடைய செய்யுங்கள். என ஒரு நீண்ட பதிவை பதிவிட்டு இருந்தார்.

அதனை தொடர்ந்து, மேற்கூறியவற்றை ரஜினிகாந்த் கூறும் வீடியோக்களையும் பதிவிட்டு, அவர் ஒரு சங்கி இல்லை. ஆதாரம் இதோ என தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன். அந்த வகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு ட்விட்டர் போஸ்டர்களை ஆதாரம் 1 மற்றும் ஆதாரம் 2 என்ற தலைப்புடன் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top