தெலுங்கானாவில் மகன் ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த தந்தை கர்ப்பிணி மருமகளை கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் பீம் ஆசிபா பாத் மாவட்டத்தில் தாஹேகம் மண்டலத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் BC சமூகத்தை சேர்ந்தவர். இவர் அதே பகுதியை சேர்ந்த ராணி என்ற பட்டியலின பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால் சேகரின் தந்தை இவர்களுடைய திருமணத்தை சிறிதும் விரும்பவில்லை. மகன் மற்றும் மருமகள் மீது அவர் வஞ்சத்துடன் இருந்துள்ளார்.
இதனிடையே ராணி தற்போது ஒன்பது மாதம் கர்ப்பிணியாக இருந்த நிலையில் சேகர் என் தந்தையின் ஜாதி வெறி ரத்த வெறியாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று கர்ப்பிணி மருமகளை அவர் இரக்கம் இல்லாமல் கோடாரியால் தாக்கினார். தாக்குதலில் பலத்த காயமடைந்த ராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ராணியின் மாமனாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு…
ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் உயிரிழந்து இரண்டு…
காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்மணி ஆகிய…
தமிழ் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான…
திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில், ஒரே குறிக்கோளுடன் ஒன்றாகப் பயணிப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்…
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவதற்கு புதிய தமிழகம்…