தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை இருந்த நிலையில் தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைப்பதற்கு பாஜக மற்றும் அதிமுக முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விஜய் பாஜக மற்றும் திமுகவை தங்கள் எதிரி என்று கூறிக் கொண்டிருக்க அது எப்படி சாத்தியமாகும் என்பதும் ஒரு பக்கம் கேள்விக்குறியாக தான் உள்ளது.
இருந்தாலும் சமீபத்தில் கரூரில் நடைபெற்ற விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பாஜக விஜயை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து விடக்கூடாது, எதிர்க்கட்சிகள் உதிரியாக இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். அப்படி எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என கூறிய அவர், இதனைப் புரிந்து கொள்ள வேண்டியது விஜய்யின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கும் இது பொருந்தும் என்று அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் விஜய் கூட்டணிக்கு வருவதற்கு பாஜக மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளது. ஒருவேளை பாஜகவின் அழைப்பை ஏற்று விஜய் கூட்டணியில் அமைந்தால் அது பொது மக்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். காரணம் பாஜகவை தொடர்ந்து தங்களுடைய எதிரி என்று கூறிவரும் விஜய் கூட்டணி அமைத்தால் அது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என தெரிகிறது.
பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…
கார் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் பல நேரங்களில் க்ளைம் நிராகரிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் பாலிசிதாரர்களின் கவனக்குறைவே ஆகும். பாலிசி காலாவதியாகி இருப்பது,…