“யார்கிட்டையாவது சொன்னா கொலை பண்ணிடுவேன்”….. 12 வயது சிறுமியை மிரட்டி 4 மாதங்களாக சீரழித்த 56 வயது நபர்…. தாம்பரத்தில் அரங்கேறிய பகீர் சம்பவம்….!

Spread the love

தாம்பரம் அருகே பிரியாணி கடை உரிமையாளர் ஒருவர், தனது கடையில் பணிபுரியும் மாஸ்டரின் 12 வயது சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த ஆதி நகர் பகுதியில் பிரியாணி தயாரிக்கும் குடோன் மற்றும் கடையை நடத்தி வரும் முகமது யூசுப் (56) என்பவரே இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அங்கு மாஸ்டராக வேலை பார்க்கும் நபர், பள்ளி விடுமுறை நாட்களில் தனது மகளை வேலை செய்யும் இடத்திற்கு அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில், அந்தச் சிறுமியின் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட உரிமையாளர் கடந்த நான்கு மாதங்களாக இப்பாதகச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், இதுகுறித்துத் தந்தையிடம் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் அச்சிறுமியை மிரட்டிப் பணிய வைத்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று, சிறுமியின் தந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற சமயம் பார்த்து முகமது யூசுப் மீண்டும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகத் தந்தை திடீரென உள்ளே வர, பயந்துபோன சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரங்கள் அனைத்தையும் கண்ணீர் மல்கக் கூறி கதறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த தந்தை, இச்சம்பவம் குறித்துச் சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட தந்தையின் புகாரின் பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்த மகளிர் போலீசார், சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து வழக்குப் பதிவு செய்து, பிரியாணி கடை உரிமையாளர் முகமது யூசுப்பை போக்சோ சட்டத்தின்கீழ் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தைகளுக்கான பாதுகாப்புப் பகுதியில் அரங்கேறிய இந்த அநீதி, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“முதல்ல காச வை.. அப்புறம் டீயை குடி”!… வாக்குவாதம் முற்றியதால் இளைஞருக்கு நேர்ந்த கதி… கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதுரைசலூர் பகுதியில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருபவர் பிரகாஷ். இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த…

1 மணத்தியாலம் ago

“ஒரு நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சு போச்சு!”… கனமழை வைத்த மரண ட்விஸ்ட்… இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் கோரம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடிக்கு உட்பட்ட போளூர் கிராமத்தில், கிணறு தோண்டும் பணியின்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.…

1 மணத்தியாலம் ago

திக் திக்… துப்பாக்கி குண்டுகளுக்கு இடையே… அலறிய 12 வயது சிறுவன்… 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்… பகீர் பின்னணி…!

26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், செப்டம்பர் 30, 2000 அன்று, இரண்டாவது இந்திஃபாடா எழுச்சியின் போது, 12 வயது…

2 மணத்தியாலங்கள் ago

கள்ளக்காதல் மோகம்!… எல்லாம் நாடகமா?… பெற்ற குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்ற தாய்… அரங்கேறிய கொடூரம்…!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகேயுள்ள மேனோன்பாறை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஜான் குமார் மற்றும் நிவேத்யா தம்பதியினருக்கு,…

2 மணத்தியாலங்கள் ago

1,000 பேருக்கு வேலை குடுங்க… இல்லன்னா வெளியே போக முடியாது… அமைச்சரின் காரை மறித்து மிரளவைத்த கலைஞர்கள்… இணையத்தில் வீடியோ வைரல்…!

ரவீந்திர பாரதியில் அமைந்துள்ள கலாச்சாரத் துறை அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணராவ் அவர்களின் அலுவலகம் முன்பாக, கலைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…

2 மணத்தியாலங்கள் ago

அபேஸ்…! ரூ.2.5 கோடி கொள்ளை… வாட்ஸ்அப் காலில் நடந்த பயங்கரம்… வீட்டை விற்க வைத்த கம்போடியா கும்பல்… மிரண்டுபோன மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!!

டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டியான விபா என்பவரை, கம்போடியாவைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று…

2 மணத்தியாலங்கள் ago