Categories: சினிமா

“10 வருசமா நான் இதனால தான் புடவையே கட்டல”.. பிக் பாஸ் விசித்திரா சொல்ற காரணத்தை கேளுங்க…

Spread the love

90களில் காமெடி நடிகர் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் நடிகை  விசித்ரா. இவர் தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ன பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் . வெள்ளி திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர். இவர் நடிப்பில் முதலில் வெளியான படம் ‘ஜாதிமல்லி’. இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் இப்படம் வெளியானது.

சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே சீரியலிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’ படத்தில் இவர் நடித்த ரதிதேவி என்கிற கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தார். 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் சினிமா துறைக்கு குட் பாய் கூறினார். தம்பதியினருக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இதைத்தொடர்ந்து இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்பொழுது சீரியல்களில் நடித்து வருகிறார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘கார்த்திகை தீபம்’ தொடரில் ராஜஸ்ரீ என்ற கதாபாத்திரத்திலும், தெலுங்கு சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ‘கீதா கோவிந்தம்’ என்ற சீரியலில் முக்கோட்டமா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதோடு மட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் மிகப்பிரபலமடைந்துள்ளார். தற்பொழுது இவர் நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வெற்றிகரமாக 48 நாட்களை நிறைவு செய்து பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளார்.

இந்நிலையில் விசித்திரா பேட்டி ஒன்றில், ‘நான் கடந்த 10 வருடங்களாக புடவையை கட்டவில்லை என கூறியிருக்கிறார். 10 வருஷமாக வெறும் நைட்டி மட்டுமே அணிந்திருந்தேன். காரணம் எனக்கு 3 பிள்ளைகள் என்பதால் சினிமாவாவில் இருந்து பிரேக் எடுத்துவிட்டேன். அவர்களுடனே முழு நேரமும் 10 வருஷம் இருந்தேன். முழுக்க முழுக்க அவர்களை கவனமாக பார்த்து வளர்த்தேன். நான் 10 வருஷம் புடவை கூட காட்டவில்லை. எங்கேயாவது செல்லவேண்டும் என்றால் பிள்ளைகளுக்கு வசதியாக இருக்கும் வகையில் நான் சல்வார் அணிந்து செல்வன். இப்படிதான் என் வாழ்க்கை ஓடியது’ என விசித்திரா கூறியுள்ளார். தற்பொழுது அவரின் இந்த பேட்டியானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“2026 ஜஸ்ட் சாம்பிள் தான்.. மெயின் பிக்சர் 2031-ல இருக்கு… தமிழக அரசியலை தலைகீழாக மாற்றப்போகும் ‘குட்டி’ ரசிகர்கள்… விஜய்யின் சைலண்ட் ஸ்கெட்ச்”…!!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு 'அரசியல் நிலநடுக்கத்தை' 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான…

7 minutes ago

“தற்குறிகள் ஆட்டம் ஆரம்பம்!” நடிகர் அருண் ராஜனின் வைரல் வீடியோ…! கொண்டாட்டமா…? அநாகரீகமா…? கொந்தளிக்கும் இணையவாசிகள்..!!

தமிழகத் தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், சின்னத்திரை நடிகர் அருண் ராஜன் வெளியிட்ட…

14 minutes ago

“தவெக தொண்டர்களிடம் பாய்ந்த போலீஸ்!.. நடுரோட்டில் வெடித்த மோதல்.. பட்டாசுகளை பிடுங்கி எறிந்த போலீஸ்.. திருப்பூரில் பரபரப்பு”..!!!

தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) திருப்புமுனையை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக பல இடங்களில் பின்னடைவைச்…

21 minutes ago

விஜய் அலையில் சிக்கிய ரஜினி டயலாக்…? ‘காலம் சொன்ன பதில்’ இதுதானா…? பஞ்ச் வசனத்தை வைலராக்கும் நெட்டிசன்கள்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது…

24 minutes ago

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்… புதிய கூட்டணி அமைக்கிறார் விஜய்… வெளியானது ரகசியத் திட்டம்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டசபை'…

48 minutes ago

கிங் ஆவாரா விஜய்…? தவெக கையில் ஆட்சியின் சாவி…? தமிழக அரசியலில் பரபரக்கும் “தொங்கு சட்டசபை..” முழு விவரம் இதோ….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) அமைவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பரவலான…

50 minutes ago