விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த அக்டோபர் 6ம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி 18 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒன்பது ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் 24 மணி நேரத்தில் போட்டியாளர் சாச்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் பிறகு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து முதல் வார எலிமினேஷனில் போட்டியாளர் ரவீந்தர் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அரணவ், தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாகும் வகையில் வைல்டு கார்டு என்ட்ரியாக 5 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய விரும்புவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதன்படி மாடல் அழகி வர்ஷினி வெங்கட், சீரியல் நடிகர் ரயான், நடிகரும் மாடலுமான ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, 2023 ஆம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் இரண்டாவது இடம் பிடித்த ரியா தியாகராஜன் ஆகி ஐந்து பேரும் வைல்டு கார்டு என்டியாக இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனைப் போலவே மிமிக்ரி ஆர்டிஸ்ட் டி எஸ் கே, சுஜா வருணியின் கணவரும் நடிகருமான சிவகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஏழு பேரில் எந்த ஐந்து பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையப் போகின்றனர் என்று இன்றைய எபிசோடில் தெரியவரும்.
தென்மேற்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளதால் தமிழகத்தில்…
தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள், கட்சிகள் இடையேயான விமர்சனங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மையமாகக் கொண்ட விவாதங்கள் தீவிரமடைந்து…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், தகுதியுள்ள மகளிருக்கான மாதாந்திர உரிமைத் தொகையை தவெக கட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி ₹2,500 ஆக…
திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்த…