#image_title
இந்தியாவில் மிகவும் பாரம்பரியமான வரலாற்று சிறப்புமிக்க பழமையான இடங்கள் இருக்கிறது. ஒரு சில இடங்கள் மட்டும்தான் அனைவருக்கும் தெரிகிறது. பலருக்கு சில இடங்கள் தெரிவதில்லை. அதில் ஒன்றுதான் திரிபுராவில் அமைந்திருக்கும் பாறை செதுக்கல்கள் கொண்ட உனகோடி. இதன் வரலாறு என்ன அது எப்போது உருவானது என்பதை பற்றி இனி காண்போம்.
திரிபுராவில் அமைந்திருக்கும் வடகிழக்கின் அங்கோர் வாட் என பிரபலமாக அறியப்படும் உனகோடி பாறை சிற்பங்கள் உருவங்கள் மற்றும் கடவுள் தெய்வங்களின் உருவங்களை கொண்ட ஒரு சிற்பச் சின்னம் மற்றும் பண்டைய காலத்து சைவ வழிபாட்டு இடமாகும். உனகோடி என்ற பெயருக்கு அர்த்தம் ஒரு கோடி இருக்கு ஒரு ரூபாய் குறைவு என்ற அர்த்தம் ஆகும். அதாவது இந்த இடத்தில் 99 லட்சத்து 99 ஆயிரத்து 999 சிலைகள் இருப்பதாக கூறுகின்றனர். அதனாலே இதன் பெயர் உனகோடி என்று ஆனது.
இந்த உனகோடியில் இருக்கும் பாறை செதுக்கல்கள் இரண்டு வகைப்படும். பாறைகளில் செதுக்கப்பட்ட உருவங்கள் மற்றும் கல் உருவங்கள். பாறையில் வெட்டப்பட்ட சிற்பங்களில் சிவன் தலை மற்றும் பிரம்மாண்ட விநாயகர் உருவங்கள் இருக்கின்றன. இங்கு இருக்கும் பிரம்மாண்ட சிலை உனக்கோடிஸ்வர காலபைரவா என்று அழைக்கப்படுகிறது. இது 10 அடி உயரமுள்ள தலை கொண்ட 30 அடி உயரமான சிறப்பம் ஆகும். சிங்கத்தில் மேலிருக்கும் துர்க்கை, நந்தி என்ன பல கடவுள்களின் சிற்பங்கள் இங்கு செதுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த உனகோடியின் புராண கதையாக சொல்லப்படுவது என்னவென்றால் சிவபெருமான் காசிக்கு செல்லும் வழியில் ஒரு இரவில் இளைப்பாறுவதற்காக இந்த உனகோடியில் தங்கினாராம். அப்போது சிவபெருமானுடன் 99 லட்சத்து 99 ஆயிரத்து 999 தேவர்கள் அவரை பின்தொடர்ந்தனராம், சூரிய உதயத்திற்கு முன் சிவபெருமான் எழுந்து விட்டதாகவும் இந்த தேவர்கள் எழும்பாமல் உறங்கிக் கொண்டிருந்ததால் கோபப்பட்ட சிவபெருமான் அவர்களை சாபமிட்டாராம். அதனால் அவர்கள் அனைவரும் கல்லாகவே இந்த உனகோடியில் தங்கி விட்டனர் என்ற ஒரு புராணக்கதை அங்கு சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் அசோகஷ்டமி மேளா விழா ஏப்ரல் மாதம் இங்கு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோவின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் இந்த உனகோடியும் இடம் பெற்று இருக்கிறது. இந்த பாறை செதுக்கல்கள் கிபி ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எல்லாம் வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்று பார்த்து விட வேண்டும்.
தமிழகத்தில் குடும்பத் தலைவர் மறைவுக்குப் பிறகு, சொத்துக்களை வாரிசுதாரர்கள் பெயருக்கு மாற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களும், அதிகப்படியான கட்டணச் சுமைகளும்…
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…
சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…
அதிமுகவில் உட்கட்சி பூசல் மற்றும் அணிகள் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த…
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதியான மகளிர் உதவித்தொகை திட்டத்தை நனவாக்கும் வகையில், 60 வயது…
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம்…