#image_title
ராஜ்குமார் பெரியசாமி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர் ஆவார். 2017 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடித்து வெளியான ரங்கூன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தில் திரைக்கதை எழுதி பிரபலமான ராஜ்குமார் பெரியசாமி தொடர்ந்து விஜய் டிவி பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் இயக்குனராக பணியாற்றினார்.
தற்போது பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாக்கி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.
இந்தத் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. இந்த படத்தை பார்த்து வெளிவந்த பலரும் கண்ணீர் விட்டு கலங்கி தான் வந்திருக்கின்றனர். இந்திய ராணுவ வீரர்கள் செய்த தியாகத்தை இந்த படம் நம் கண்முன்னே எடுத்துக்காட்டுகிறது. ராஜ்குமார் பெரியசாமி ஒரு நேர்காணலில் அவரது Script மற்றும் கதை எடுக்கும் விதத்தைப் பற்றி பகிர்ந்து இருக்கிறார்.
ராஜ்குமார் பெரியசாமி கூறியது என்னவென்றால் நான் எழுதும் கதை Script எனக்கு தோன்றுவது எல்லாமே உண்மை சம்பவங்களை அடிப்படையில் வைத்து தான் நான் எழுதுவேன். சாமானிய மனிதனாக இருந்தாலும் சரி அவர்கள் வாழ்வில் ஏதாவது என் மனதை தொடும்படி உண்மை சம்பவம் இருந்தால் அதை படத்துக்காக எழுதி வைத்துக் கொள்வேன் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் அமரன் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட 341 ஏக்கர் வனப் நிலத்தை மீட்க முயன்ற வனத்துறை அதிகாரிகள் இருவர் மீது…
குஜராத் மாநிலம் மோர்பியில் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஒரு பெண் வழக்கறிஞரின் காரை அண்டை வீட்டுக்காரர்…
மகாராஷ்டிராவில் உள்ள விரார் பகுதியில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று…
ரிஷிகேஷில் உள்ள சுதாமா மார்க்கில் அமைந்திருக்கும் GMOU வளாகத்தின் இரும்புச் சந்தையில், கட்டடத்தின் ஒரு பகுதியின் கைப்பிடிச் சுவர் திடீரென…
திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனை…
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அப்போது, திமுக அல்லது அதிமுகவின் சார்பில்…