சினிமாவை பொருத்தவரையில் திரையரங்கில் வெளியாக கூடிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்படி வரவேற்பு கிடைக்கின்றதோ அதேபோல netflix, பிரைம் வீடியோ, ஜியோ சினிமா மற்றும் ஓடிடி போன்ற தளங்களில் வெளியாக கூடிய திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் அமரன் மற்றும் பிரதர் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியானது. இந்த நிலையில் நவம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள திரைப்படங்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
வேட்டையன்:
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரஜினி மற்றும் அமிதாபச்சன் இருவரும் 33 வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக இணைந்து நடித்த வேட்டையன் திரைப்படத்தை இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் பகத் பாஸில், உஷாரா விஜயன் மற்றும் மஞ்சு வாரியார் உள்ள முக்கிய பிரபலங்கள் பலரும் நடித்திருந்த நிலையில் இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 7 ஆம் தேதி வழியாக உள்ளது.
தங்கலான்:
கதைக்கவும் கதாபாத்திரத்திற்காகவும் உயிரைக் கொடுத்து நடிக்கும் ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர்தான் விக்ரம். இவர் நடிப்பில் உருவான தங்கலான் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 110 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜா ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்த நிலையில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சார்:
நடிகராக அறிமுகமாகி பிறகு இயக்குனராக அவதாரம் எடுத்த போஸ் வெங்கட் இயக்கி இருந்த திரைப்படம் தான் சார். கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தில் நடிகர் கமல் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக சாயாதேவி நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் நவம்பர் இரண்டாவது வாரத்தில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தேவரா:
RRR திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக அறியப்பட்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள ஜூனியர் என்டிஆர் நடிப்பில் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீசான திரைப்படம் தான் தேவரா. கொரட்டல்லா சிவா இயக்கி இருந்தால் இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் நவம்பர் எட்டாம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…