சர்ச்சைக்கு உள்ளாகி இந்த சீசனில் ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்ட பிக் பாஸ் பிரபலமான பிரதீப் ஆண்டனியின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் களமிறக்கப்பட்டனர்.
இவர்களில் கலந்து கொண்ட நாள் முதலே மிகவும் சாதுரியமாகவும், பிக் பாஸ் கேமை நன்றாக புரிந்து கொண்டும் விளையாடியவர் தான் போட்டியாளர் பிரதீப். இவர் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் கவினின் நண்பர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினை பார்க்க பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார் பிரதீப். அப்பொழுது அவரை ஓங்கி அறைந்தார். இதன் மூலம் அவர் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
தற்பொழுது இவர் பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டு தனது சிறப்பான விளையாட்டினை வெளிப்படுத்தி வந்தார். இவர் தான் டைட்டிலே வெல்வார் என்று இவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், சக ஹவுஸ்மேட்களால் டார்கெட் செய்யப்பட்டு, ஒரு பொய்யான குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது. அதாவது பிக் பாஸ் வீட்டில் இவர் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பெரும்பாலான போட்டியாளர்கள் வாக்களித்து, அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து, கமலஹாசன் எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் அவரை ரெட் கார்டு கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றினார்.
இணையத்தில் பிரபலங்களும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும், ரசிகர்களும் என பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து இந்த சர்ச்சைக்கு சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்தார் பிரதீப். டைட்டில் ஜெயித்திருந்தால் கூட இவ்வளவு பிரபலம் அவருக்கு கிடைத்திருக்காது. அந்த அளவுக்கு தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகிறார். தற்பொழுது இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது..
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,…
இசைஞானி இளையராஜாவின் காப்புரிமை பெற்ற பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து பாய்ந்து வருகின்றன. அந்த வகையில்,…
கர்நாடக மாநிலம் மால்பே பகுதியைச் சேர்ந்த 41 வயதான பிரபல தொழிலதிபர் சந்தீப் சாலியன், நீர் விளையாட்டு உபகரணங்களை வாடகைக்கு…
ஆட்சி கவிழ்ப்பு புகார் தொடர்பான விசாரணைக்கு செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவருமே இதுவரை போலீசில் ஆஜராகவில்லை…
விசிக தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவரது…
கோவையில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் சினிமா பாணியில் கடத்தப்பட்டு, பின்னர் கடத்தல் கும்பல் ஆளை மாற்றி கடத்தியதை உணர்ந்து அவரை…