Connect with us

CINEMA

அடேங்கப்பா.., இத்தன நாளா இது தெரியாம போச்சே.. இந்த பாட்டெல்லாம் பாடுனது பிக் பாஸ் யுகேந்திரனா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் 7 வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது.  ஆக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 46 நாட்களை கடந்துள்ளது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கும் , சண்டைக்கும் பஞ்சமில்லாமல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

   

இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில்,  இவர்களை தொடர்ந்து 5 வைல்ட்  கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கினர். தற்பொழுது வரை இவர்களில் 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தான் பாடகர் யுகேந்திரன். பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற இவர் தனது திறமையான விளையாட்டினால் ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்துள்ளார்.

பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் தான் பாடகர் யுகேந்திரன். இவர் தமிழ் சினிமாவில் எக்கச்சக்க பாடல்களை பாடியிருக்கிறார்.  ‘பூவெல்லாம் உன் வாசம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதேபோல் விஜய் நடித்த யூத் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  மலேசியா வாசுதேவன் மறைந்த பிறகு நியூசிலாந்தில் செட்டிலாகிவிட்டார் யுகேந்திரன். தமிழ் சினிமாவில் நடிப்பதையோ பாடுவதையோ சுத்தமாகவே நிறுத்திவிட்டார்.

வெளிநாட்டில் செட்டில் ஆன அவர் அங்கு ரம்புட்டான் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி உலகம் முழுவதும் இசை கான்செர்ட்டுகளை நடத்தி வந்தார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு குறைந்த வாக்குகள் பெற்று சமீபத்தில் வெளியேறினார். தற்பொழுது இவர் பாடிய பல சூப்பர் ஹிட் பாடல்களில் நாம் அறியாத சிலவற்றை பற்றி நாம் இங்கு பார்க்கலாம்.  நடிகர் பிரசாந்த் நடித்த திரைப்படத்தில் வரும் “மனதில் இத்தனை ரணமா? அட வலியில் இத்தனை சுகமா பாத்தேன்” என்ற பாடலும் ,

நடிகர் விக்ரமின் “கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?” என்ற பாடலும்,  “முதன்முதலாய் ஒரு மெல்லிய சந்தோசம் வந்து ” என்ற பாடலும், “காதல் ஒன்றும் தவறே இல்லை ,காதலின்றி மனிதனும் இல்லை, நண்பர்களும்  காதலரனால்” நடிகர் அருண் விஜயின் தோழா திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த சூப்பர் ஹிட் பாடலையும் பாடியது யுகேந்திரன் அவர்கள் தானாம். இன்னும் இதுபோல பல 90’ஸ் பேவரைட் பாடல்களை யுகேந்திரன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in CINEMA

To Top