இறுதிக்கடத்தை நெருங்கும் பிக் பாஸ்..  டைட்டில் வெல்ல போகும் அந்த போட்டியாளர் யார் தெரியுமா…? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது ஒரு வழியாக இறுதிக்கட்டத்தையும் நெருங்கியுள்ளது .அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது 70 நாட்களைக் கடந்து இன்னும் நிறைவடைய 30 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது. இதில் இதுவரை யார் வெற்றியாளர்? என்பதை ரசிகர்களால் கணிக்க முடியவில்லை என்றே கூறலாம்.

   

பாதி நிகழ்ச்சி முடிந்த உடனே வெற்றியாளர் யார் என்பதை ரசிகர்கள் ஓரளவுக்கு கணித்து விடுவார்கள். ஆனால் இந்த சீசனை பொருத்தவரையில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகின்றனர். போட்டியாளர்களுக்கு இடையே வன்மம் தலை விரித்து ஆடுகிறது. ஆனாலும் இந்த டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது.

அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘டிக்கெட் டு பினாலே’ டாஸ்க் நடைபெறுகிறது. இந்த டிக்கெட்டை  எப்படியாவது வாங்கி பைனலுக்கு செல்ல வேண்டும் என போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டுள்ளனர். இன்னும் நிகழ்ச்சி முடிய 30 நாட்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில் பிக் பாஸ் வீட்டில் தற்பொழுது 13 போட்டியாளர்கள் உள்ளனர்.

இவர்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த போட்டியாளர்கள் என பார்த்தால் மாயா ,பூர்ணிமா, விசித்ரா, அர்ச்சனா. இவர்களில் மாயா ரசிகர்கள் மத்தியில் பெருமளவு வெறுப்பை சம்மதித்துள்ளார். ஆனால் ஒரு சிலரோ அவரை பாராட்டியும் தான் வருகின்றனர். இவரை தொடர்ந்து விசித்திரா ரசிகர்களால் ராஜமாதாவாக கொண்டாடப்படுகிறார். அர்ச்சனா ஆரம்பத்தில் மாயா கேங் – கிற்கு  எதிராக குரல் கொடுத்ததால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

ஆனால் தற்பொழுது அவரது விளையாட்டினை பார்த்த ரசிகர்கள் வெறுப்படைந்து வருகின்றனர். அதேபோல பூர்ணிமாவும் சோசியல் மீடியாவில் தனக்கு இருந்த நல்ல பெயரை பிக் பாஸ் வீட்டிற்கு சென்று கெடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் மாயா, விசித்ரா இவர்களில் ஒருவர் தான் இந்த சீசனின் டைட்டில் வெற்றியாளராக இருப்பார்கள் என்று ரசிகர்கள் தற்பொழுது கணித்துள்ளனர். பொறுத்திருந்து பார்க்கலாம் டைட்டில் யாருக்கு என்பதை.  நீங்களும் டைட்டில் யார் ஜெயிச்சா நல்லா இருக்கும்னு கமெண்ட்ஸ் -ல சொல்லுங்க…