Connect with us

CINEMA

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிக்பாஸ் பிரபலம்… ஏற்கனவே வில்லனா நடிச்சி சொதப்புனது பத்தாதா ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நீண்ட காலமாக தொடங்கப்படாமல் இருந்த விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ள நிலையில் படபிடிப்பு தொடங்கியுள்ளது குறித்த எந்த ஒரு தகவலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிடவில்லை. இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஒருவர் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது.

   

அஜித் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ரிலீஸுக்கு முன்பாக தன்னுடைய அடுத்த படத்தில் அஜித் கமிட் ஆகிய இருந்த நிலையில் பல காரணங்களால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து அஜர்பைஜானில் அண்மையில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கியது. அதனால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தத் திரைப்படத்தில் அஜித்துடன் திரிஷா ஜோடி சேர்ந்து நடிக்கும் நிலையில் அர்ஜுன் வில்லனாக களமிறங்குகின்றார்.

இவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தில் இரண்டாவது வில்லனாக பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த மகிழ்ச்சிறுமேனியின் முந்தைய படமான கலக தலைவன் திரைப்படத்தில் ஆரவ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இருந்தாலும் விடாமுயற்சி படத்தில் அர்ஜூன் முக்கிய வில்லனாகவும் இவர் இரண்டாவது வில்லனாகவும் இருப்பார் எனக் கூறப்படுகிறது.

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top