தமிழ் சினிமாவில் ஜெயம் கொண்டான் திரைப்படத்தில் நடித்த பிரபலமான வினய், பல வருடங்களாக நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோஷூட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் வினய் சமீப காலமாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அசித்தி வருகிறார்.
துப்பறிவாளன், டாக்டர், எதற்கும் துணிந்தவன், வீரன் ஆகிய பல திரைப்படங்களில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.
பாலச்சந்திரன் இயக்கத்தின் வெளியான பொய் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை விமலா ராமன்.
இவர் ராமன் தேடிய சீதை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடைசியாக சுந்தர் சி யின் இருட்டு திரைப்படங்களில் நடித்தார்.
பல வருடங்களாக நடிகர் வினையுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வரும் இவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட போட்டோ சூட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.