இது ரெண்டாவது Branch-ஆம்.. பிசினஸில் கல்லாவை நிரப்பும் KiKi – சாந்தனு ஜோடி.. ஸ்டுடியோவை திறந்து வைத்த பிரபலங்கள்..!

By Mahalakshmi on மே 11, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 80’ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வந்தவர் பாக்கியராஜ். இவரது மகன் சாந்தனு பாக்யராஜ் நீண்ட காலமாக கோலிவுட்டில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக போராடி வருகின்றார். பாக்யராஜின் மகன் என்கின்ற பின்புலம் இருந்தாலும் தொடர்ந்து சினிமாவின் அவரால் சாதிக்க முடியவில்லை.

   

1998 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தொடர் தந்தை அளவுக்கு ஜொலிக்க முடியவில்லை.

   

 

ஆரம்பத்தில் சில நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தாலும் சில வருடங்களாக இவருக்கு சரியான கதை அமையவில்லை. சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து வெற்றியை பிடிப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கின்றார் நடிகர் சாந்தனு. இவருடைய ப்ளூ ஸ்டார் திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

இவர் தொகுப்பாளினி கீர்த்தி என்கின்ற கிகியை திருமணம் செய்து கொண்டிருந்தார். இவர் திருமணத்திற்கு முன்பே டான்ஸ் வீடியோ ஒன்றை வைத்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது 2-வதாக ஆவடியில் புது டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றை திறந்து இருக்கின்றார். இந்த டான்ஸ் வீடியோவுக்கு நடிகை சுகாசினி, ஐஸ்வர்யா ராஜேஷ், பரத், கலையரசன், சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த டான்ஸ் வீடியோவை திறந்து வைத்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.