பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக பிரபலமான நடிகை சாந்தி வில்லியம்ஸ் அளித்திருக்கும் பேட்டியானது தற்போது வைரலாகி வருகின்றது. கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த இவர் பின்னர் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்த போது மலையாளத்தில் செம்மீன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 1972 ஆம் ஆண்டு வெளியான அந்த படத்தில் நடித்த போது அவருக்கு வயது 11.
அத்தோடு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வாங்கினார். தொடர்ந்து மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கதாநாயகியாக பல படங்களில் நடித்திருக்கின்றார் இவர் தமிழில் மாந்தோப்பு கிளியே என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மூடுபனி, பணம் பெண் பாசம், நெஞ்சத்தை கிள்ளாதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
1979 ஆம் ஆண்டு இவருக்கு திருமணமானது. இவர் மலையாளத்தில் பிரபல கேமரா மேன் வில்லியம்ஸ் செய்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நான்கு குழந்தைகளை பெற்றுக் கொண்டு சிறப்பாக வாழ்ந்து வந்தார். அதுமட்டுமில்லாமல் தங்களது வீட்டை சுற்றி அத்தனை கார்கள் இருக்கும், என் கணவருக்கு கார் என்றால் மிகவும் பிடிக்கும் ஒவ்வொரு திசையிலும் ஒரு கார் நிற்கும், எந்த திசை பக்கம் செல்ல வேண்டுமோ அந்த காரை எடுத்துக் கொண்டு சென்று விடுவார்.
ஏவிஎம் ஸ்டுடியோக்கு போனால் பலரும் அவர் காரை வாங்கிக் கொண்டு சுற்றிப் பார்க்க கிளம்பி விடுவார்கள் என்று ஒரு பேட்டியில் கூட சாந்தி வில்லியம்ஸ் கூறியிருந்தார். இவ்வளவு செல்வ செழிப்பாக இருந்த சாந்தி வில்லியம் கணவர் வில்லியம்ஸ் தொடர்ந்து படங்களை தயாரித்த காரணத்தினால் ஏகப்பட்ட பணத்தை இழந்தார். பல கோடி சொத்துக்களை இழந்து உடல்நிலை பாதிக்கப்பட்டார்.
அவர் உடல் நிலையை சரி இல்லாத போது உதவிக்கு யாருமே வரவில்லை என்று கண்ணீருடன் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் சாந்தி வில்லியம்ஸ். மேலும் தன்னிடம் இருந்த மிச்ச மீதி சொத்துக்கள் புடவைகள் அனைத்தையும் விற்று தனது குழந்தைகளை படிக்க வைத்ததாக தெரிவித்தார். 18 வருடத்திற்கு பிறகு மீண்டும் சீரியல் மற்றும் நடித்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார் சாந்தி வில்லியம்ஸ்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சாந்தி வில்லியம்ஸ் தனது தோழியான கே ஆர் வத்சலா பற்றி கூறியிருந்தார். இவர் பிரபல நடிகையான கே ஆர் விஜயாவின் தங்கை ஆவார். அந்த பேட்டியில் அவர் கூறியபோது தனக்கு ஒரு பணம் நெருக்கடி வந்தது. உடனே வத்சலாவுக்கு போன் செய்து அர்ஜெண்டாக பத்தாயிரம் வேண்டும் இருந்தால் கொடு என்று கேட்டேன். உடனே அவர் தன்னிடம் இல்லை என்று கூறிவிட்டார்.
கேட்டவுடனே அள்ளிக் கொடுக்கும் தெய்வம் அவர். ஆனால் அன்றைய தினம் அப்படி சொன்னதால் ரொம்பவும் மனமுடைந்து போனேன். பின்னர் நான்கு நாட்கள் கழித்து அவரே போன் செய்து வீட்டிற்கு வர முடியுமா? என்று கேட்டார். நானும் ஆட்டோவை பிடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றேன். அங்கு சென்று அவருக்கு போன் செய்த போது நான் வீட்டில் இல்லை வீட்டின் கதவு அருகே ஒரு பை இருக்கும் அதில் பணம் இருக்கும் அதை எடுத்துக் கொண்டு போ என்று கூறினார்.
உடனே நான் அங்கு சென்று பணத்தை எடுத்த போது நான் கேட்டதை விட பல மடங்கு அதிக பணம் இருந்தது. பின்னர் மீண்டும் அவருக்கு போன் செய்து பேசியபோது இது எனக்கு வந்ததில் ஒரு பங்கு, நீ எனது தங்கை இதை எடுத்துக் கொண்டு போய் யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ கொடுத்து கடன்களை முடித்துவிடு என்று கூறினார். இதனை நான் என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் என்று உருக்குத்துடன் அந்த பேட்டியில் பேசியிருந்தார் சாந்தி வில்லியம்ஸ்.