தாடிய நான் எடுத்ததே இல்ல, இதான் ஃபர்ஸ்ட் டைம்.. காதல் தோல்விக்கு அப்பறம்.. அமீரின் தாடிக்கு பின்னால் இருக்கும் காரணம்..!

By Mahalakshmi on மே 11, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே உள்ளிட்ட வித்தியாசமான படைப்புகளை கொடுத்து பிரபலமானவர் இயக்குனர் அமீர். தற்போது யோகி, ஆதி பகவன், வடசென்னை, மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகராகவும் வலம் வருகிறார். அதிலும் வடசென்னை படத்தில் அவர் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

   

நடிகராக கலக்கி வரும் அமீர் தற்போது ஹீரோவாக உயிர் தமிழுக்கு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். அமீர் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி, மறைந்த நடிகர் மாரிமுத்து, ராஜ்கபூர், மகாநதி சங்கர், கஞ்சா கருப்பு, சரவண சக்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். மூன் பிச்சர் தயாரிப்பில் ஆதம்பாவா இயக்கியுள்ள இந்த திரைப்படம் தான் உயிர் தமிழுக்கு.

   

 

இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழு நீள நகைச்சுவை படத்தை தயாரித்திருக்கிறார்கள். சத்யராஜின் அமைதி திரைப்படம் போல் காமெடி கடந்த ஒரு அரசியல் படமாக அமைந்திருக்கின்றது. என்னதான் பழைய படங்கள் பாணியில்  இருந்தாலும் இந்த படத்தை மக்கள் கொண்டாடியிருக்கிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைக்க, பாடல்களை பா விஜய் எழுதியிருக்கின்றார். இப்படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் இயக்குனர் அமீர். தொகுப்பாளர் எப்போதும் உங்களை தாடியுடன் தான் நாங்கள் பார்த்து இருக்கிறோம். தாடி இல்லாமல் உங்களைப் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. ஏன் எப்போதும் தாடியுடன் இருக்கிறீர்கள்? அதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த அமீர் கல்லூரி படிக்கும் போதிலிருந்து நான் தாடி வைத்துள்ளேன். தன்னை மெச்சூராக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தாடி வைக்க தொடங்கினேன். அதன் பிறகு காதல் தோல்வி அப்படியே தாடி என்பது என்னுடனே வளர்ந்து விட்டது. இடையில் இந்த படத்திற்காக தாடியை எடுத்து விட்டு வீட்டிற்கு சென்றபோது கதவை தட்டியவுடன் என் மனைவிக்கு முதலில் என்னை அடையாளம் தெரியவில்லை. 4 செகண்ட் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று பேசியிருந்தார் அமீர்.