டைட்டிலில் என் பெயர்தான் வரணும்.. சண்டையிட்ட 3 நடிகைகள்.. பார்த்தால் பசி தீரும் படத்தில் சாமர்த்தியமாக செயல்பட்ட இயக்குனர் பீம்சிங்..!

Spread the love

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர்தான் பீம்சிங். கோலிவுட் சினிமாவின் அக்கால நடிகர்களின் பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதினார். சில படங்களை இயக்கியது மட்டுமல்லாமல் அதனை தயாரிக்கவும் செய்தார். இவர் தன்னுடைய உயர்நிலைப் படிப்பை முடித்த கையோடு ஆந்திர பிரபா என்ற தெலுங்கு பத்திரிக்கையில் சிறிது காலம் துணையாசிரியராக பணியாற்றினார் அதன் பிறகு சோனா பாய் என்பவரை பீம்சிங் திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது மனைவியின் சகோதரரும் தன்னுடைய மைத்துனரின் உதவியுடன் சினிமாவிற்குள் நுழைந்தார். ஆரம்ப காலகட்டத்தில் பஞ்சு கிருஷ்ணன் இயக்குனர்கள் குழுவில் உதவி இயக்குனராக பணியாற்றினார். எடிட்டிங் துறையிலும் சிறந்து விளங்கினார்.

ஒரு படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா, பீம்சிங் திரைப்படம் போல இருக்கணும் என்று அனைவரும் சொல்லும் அளவுக்கு படங்களை எடுக்க ஆரம்பித்தார். உறவுகளுக்கு உயிர் ஊட்டி திரைகளில் உலாவ விட்டவர் பீம்சிங். இவருடைய திரைப்படங்கள் என்றாலே குடும்பத்துடன் பார்க்கும் படங்களாகத்தான் இருக்கும். 1954 ஆம் ஆண்டு அம்மையப்பன் என்ற திரைப்படத்தை பீம்சிங் இயக்கிய நிலையில் இந்தத் திரைப்படம் தான் அவர் இயக்கிய முதல் திரைப்படம். முதல் படம் வெற்றி பெற விட்டாலும் துவண்டு போகாத பீம்சிங் அடுத்தடுத்த படங்களை கொடுத்து சினிமாவில் தன்னை ஒரு இயக்குனராக நிலை நிறுத்தினார்.

அப்படி 1962 ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கிய திரைப்படம் தான் பார்த்தால் பசி தீரும். ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து பல முக்கிய நடிகைகள் நடித்திருந்தனர். ஒரு பக்கம் சாவித்திரி மறுபக்கம் சரோஜா தேவி மட்டுமல்லாமல் சௌகார் ஜானகியும் இப்படத்தில் நடித்திருந்தார். இவர்கள் மூன்று பேருமே பிரபலமான நடிகைகள் தான். ஆனால் அப்போதைய காலத்தில் சரோஜாதேவி மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். இதன் காரணமாக டைட்டிலில் என்னுடைய பெயர் தானே வரும் என்று இயக்குனர் பீம் சிங்கிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு பீம்சிங் உடனடியாக பதில் அளிக்காமல் சிரித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார்.

அடுத்து சாவித்திரி சென்று சரோஜாதேவியை விட நான் தான் சீனியர் டைட்டிலில் என்னுடைய பெயர் தான் இருக்க வேண்டும் என்று பீம் சிங்கிடம் கூறியுள்ளார். இதைவிட பீம் சிங்கிற்கு மற்றொரு விஷயம் தெரியும். அதாவது இவர்கள் இருவரை விட சௌகார் ஜானகி தான் மூத்த நடிகை. இப்படியான நிலையில் மூன்று நடிகைகளையும் தனித்தனியாக அழைத்து நீங்கள் திருப்தி படும்படி படத்தின் டைட்டில் இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த தகவலை அறிந்த ஏவிஎம் சரவணன் அப்படி என்னதான் செய்யப் போகிறார் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தார். இறுதியாக இப்படத்தின் டைட்டிலில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு மிகவும் அழகாக உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும் பார்த்தால் பசி தீரும் என்று பீம்சிங் போட்டுள்ளார். இதைப் பார்த்ததும் ஏவிஎம் சரவணன் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

Nanthini

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

6 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

6 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

7 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

7 மணத்தியாலங்கள் ago