இந்திய நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை காம்னா. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார். தனது முதல் திரைப்படமே வெற்றி பெற்றதால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. தமிழில் 2005 ஆம் ஆண்டு இதய திருடன் என்ற திரைப்படத்தில் தீபிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருப்பார். இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படமும் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பிரபலமடைந்தது. இவர் தனது முதல் திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு மச்சக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்தார். பிறகு ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து ராஜாதி ராஜா, 2011 ஆம் ஆண்டு காசேதான் கடவுளடா என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் இவருக்கு தமிழில் எந்த ஒரு திரைப்படமும் கிடைக்காததால் தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த சூரஜ் நாக்பால் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர் தனது கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் பெங்களூரில் வசித்து வருகின்றார். இந்த நிலையில் அவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காம்னாவா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…