Categories: சினிமா

வரிசையாக ஐந்து படங்கள் ஹிட் கொடுத்து ஆறாவது படத்தில் சறுக்கிய பாரதிராஜா… நிழல்கள் ப்ளாப்புக்கு காரணம் என்ன?

Spread the love

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அதுவே அவரின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. முதல் பட ஹிட் கொடுத்த போது ஏதோ அதிர்ஷ்டத்தில் வென்றதாக பலரும் சொன்னார்கள்.

ஆனால் அடுத்தடுத்து ‘கிழக்கே போகும் ரயில்’,  ‘சிவப்பு ரோஜாக்கள்’, புதிய வார்ப்புகள் மற்றும் நிறம் மாறாத பூக்கள் என தொடர்ச்சியாக ஐந்து ஹிட்களைக் கொடுத்தார். இதனால் அவரின் புகழ் தமிழ் சினிமா தாண்டியும் பரவியது. ஆனால் அடுத்து அவர் இயக்கிய ஆறாவது படமான நிழல்கள் படுதோல்வி படமாக அமைந்தது.

இத்தனைக்கும் அந்த படத்தில் இளையராஜாவின் பாடல்கள் அப்போதே சூப்பர் ஹிட் ஆகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன. ஆனாலும் நிழல்கள் படம் தோல்வி அடைந்ததற்கு அதன் கதையமைப்புதான் காரணம். அந்த படத்தில் மூன்று விதமான இளைஞரகளின் வாழ்க்கையையும், அவர்கள் தங்கள் லட்சியங்களை அடைவதற்கான போராட்டத்தையும் காட்டியிருப்பார்கள்.

திறமையிருந்தும் மூன்று பேருமே இறுதியில் தோற்றுப் போவது போல படம் முடியும். இது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. வாழ்க்கையின் எதார்த்தத்தை நிழல்கள் படம் சொன்னாலும் கதாநாயகர்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பியிருக்கிறார்கள். அதனால் இந்த படத்தை ரசிகர்கள் கைவிட்டார்கள். அப்போது பாரதிராஜா கதாநாயகனாக நடித்திருந்த ‘கல்லுக்குள் ஈரம்’ திரைப்படமும் ரிலீஸாகி தோல்வி அடைந்தது.

இதனால் பாரதிராஜா இனிமேல் அவ்வளவுதான் என்ற பேச்சுகள் எழுந்த போது ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற சூப்பர் ஹிட் படத்தை எடுத்து கம்பேக் கொடுத்தார் பாரதிராஜா.

vinoth

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

7 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

8 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

8 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago