#image_title
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.
அந்த படம் அவருக்கு மட்டும் திருப்புமுனையாக அமையாமல் தமிழ் சினிமாவுக்கே ஒரு ட்ரண்ட் செட்டராக அமைந்தது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 25 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகனாகவு, அதன் பிறகு 20 ஆண்டுகள் குணச்சித்திர நடிகராகவும் கலக்கினார்.
அவரின் குடும்பத்தில் அவரின் மகன்களான பிரபு, ராம்குமார் ஆகியோரும் பேரன்களான விக்ரம் பிரபு, துஷ்யந்த் ஆகியோரும் நடிகர்களாக வந்து தங்களுக்கென ஒரு அடையாளத்தைப் பெற்றுள்ளனர். இதில் மிகவும் வெற்றிகரமான நடிகராக வலம் வந்தவர் பிரபுதான். ஆனால் பிரபுவின் நடிப்பிலேயே பல திருத்தங்களை சொல்லி ‘நீ இன்னும் உன்னை மெருகேற்றிக் கொள்ள வேண்டும்’ என சொல்வாராம் சிவாஜி.
அதே போல பிரபுவை ஜாலியாக இருக்கும் போது ‘குண்டன்’ என்றுதான் சொல்லி கலாய்ப்பாராம். அதே போல ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடன இயக்குனர் சுந்தரம் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது அவரிடம் “நான் ரெண்டு யானக் குட்டிகள பெத்து வச்சிருக்கேன். நீ ரெண்டு குரங்கு குட்டிகள பெத்து வச்சிருக்க’ என ஜாலியாக சொன்னாராம்.
சுந்தரம் மாஸ்டரின் மகன்களான பிரபுதேவா மற்றும் ராஜு சுந்தரம் ஆகிய இருவரும் அப்போது நடன இயக்குனர்களாக அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த சமயம். அவர்களின் நடனத்தை ஜாலியாக கலாய்ப்பது போல இந்த கமெண்ட்டை அவர் அடித்தாராம். இதை சினிமா பற்றி பல அரிய தகவல்களைப் பகிர்ந்து வரும் எழுத்தாளர் ஆர் பி ராஜநாயஹம் சமீபத்தில் ஒரு நிலைத் தகவலில் பகிர்ந்துள்ளார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…