#image_title
தமிழ் சினிமாவில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்த அஜித்துக்கு ‘ஆசை’ திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. ஆசை படத்துக்குப் பிறகு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அஜித். அந்த படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் ஆலயம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. படத்தின் ஷூட்டிங் தொடங்கி அஜித் 10 நாட்கள் வரை இந்த படத்தில் நடித்தும் இருந்தார்.
ஆனால் அதன் பிறகு அவர் அந்த படத்தில் இருந்து விலகினார் அல்லது நீக்கப்பட்டார். இதுபற்றி பலவிதமான தகவல்கள் தமிழ் சினிமா உலகில் பரவி வருகின்றன. இந்நிலையில் ஆசை படத்தில் இணை இயக்குனராக பணியாற்றி அஜித்துக்கு நெருக்கமான நண்பராக இருந்த மறைந்த நடிகர் மாரிமுத்து இதுபற்றி ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்.
ஒரு நேர்காணலில் “அஜித் அப்போது ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அதனால் கொஞ்சம் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்தார். ஒரு கட்டத்தில் தயாரிப்பு நிறுவனம் அஜித் வேண்டாம் என்ற முடிவை எடுத்தனர். அதன் பிறகு அந்த வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச ஆரம்பித்தார்கள்.
#image_title
முதலில் பிரசாந்த்தான் சாய்ஸில் வந்தார். ஆனால் அப்போது அவர் ஜீன்ஸ் படத்திற்காக வேறு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என ஒப்பந்தம் போட்டிருந்தார். அடுத்து பிரபுதேவாவைக் கேட்டோம். அவர் தரப்பில் “வேறொரு ஹீரோ நடித்து விலகிய கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன்’ எனக் கூறிவிட்டார்.
இப்படியே போய் கடைசியில் மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரனைக் கூட பேசினோம். ஆனால் அவரோடு நடிக்க விஜய் மறுத்து விட்டார். அப்புறம்தான் கடசியாக வசந்த் சார் சிவகுமார் பையன் சரவணன் சரியாக இருப்பான் என சொல்ல சிவகுமார் சாரிடம் பேசி சமாதானம் செய்து அவரை நடிக்க வைத்தோம். சூர்யாவும் விஜய்யும் கல்லூரி கால நண்பர்கள் என்பதால் விஜய் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்தார்” எனக் கூறியுள்ளார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…