#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்தவர் ரா. சங்கரன். ஆனால் அவரை இயக்குனராக அறிந்ததை விட ஒரு நடிகராகதான் ரசிகர்கள் அறிவார்கள். குறிப்பாக மணிரத்னம் இயக்கிய மௌனராகம் படத்தில் சந்திரமௌலி எனும் கதாபாத்திரத்தில் ரேவதியின் தந்தையாக நடித்திருப்பார்.
அந்த படத்தில் கார்த்திக், ரேவதி மற்றும் இவர் என மூவரும் நடித்த காபிஷாப் காட்சி இன்றளவும் ரசிக்கப்படும் காட்சியாக உள்ளது. அந்த காட்சியில் கார்த்தி பேசும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ எனும் வசனம் எவர்கிரீன் வசனமாக நினைவு கூறப்படுகிறது. இந்த படத்தின் வெற்றியால் இவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அமைந்தது.
பெரும்பாலும் பெரிய மனிதர் வேடம், நீதிபதி வேடம், சாந்தமான மனிதர் வேடம் என நடித்து வந்தார். 90 களில் பிஸியான நடிகராக வலம் வந்த சங்கரன் 2000 க்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். அதற்கு வயது மூப்புதான் காரணம் என சொல்லப்பட்டது.
இப்படி நடிகராக அறியப்பட்ட சங்கரன் வெறும் நடிகர் மட்டுமில்லை. அவர் ஒரு இயக்குனரும் கூடதான். . 1974 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு. என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் கால் பதித்தார்.இதை தொடர்ந்து தேன் சிந்துதே வானம், துர்கா தேவி, ஒருவனுக்கு ஒருத்தி, தூண்டில், பெருமைக்குரியவள் போன்ற பல ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
#image_title
இந்த படங்கள் பெரியளவில் வரவேற்பைப் பெறாத காரணத்தால் சங்கரன் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அப்படிதான் நடிகராக ‘ஆடிப்பெருக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினர். இவரிடம் தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய 92 ஆவது வயதில் வயது மூப்புக் காரணமாக உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களும், கலைஞர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது,.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…