உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள நெக்ஸாரா காலனியில், திருட்டுப் பழி சுமத்தப்பட்டு வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். உபாசனா என்ற அந்தப் பெண்ணை நாற்காலியில் கட்டிப்போட்ட வீட்டு உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், செருப்பாலும் குச்சிகளாலும் ஈவிரக்கமின்றி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட ஒரு பெண் உபாசனாவின் கழுத்தில் குச்சியை வைத்து நெரிக்கும் கொடூரமான செயலும் அரங்கேறியுள்ளது.
இந்தக் கொடூரத் தாக்குதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு அவர்கள் தன்னை வற்புறுத்தித் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட உபாசனா வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் கோடிகுப்பல் பகுதியில் நடைபெற்ற தசராவின் போது, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுத்துப் பாதுகாப்பை…
மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூர் நகரின் திலக் சௌக் பகுதியில் உள்ள குபேர்கல்லி பகுதியில் பழமையான சுவர் ஒன்று திடீரென இடிந்து…
உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில், 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் காவலர் மீது சுமத்தியுள்ள பாலியல் வன்கொடுமை மற்றும்…
உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் இரண்டு காளை மாடுகள்…
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானி, பசு பாதுகாப்பு மற்றும் 'கோ சேவை' குறித்துப் பேசிய வீடியோ…
பஞ்சாப் மாநிலம் கோட்காபுராவைச் சேர்ந்த பிம்லா தேவி என்ற பெண்மணி, தனது குழந்தைகளுக்குத் துணி வாங்கச் சென்ற இடத்தில் வாங்கிய…