விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் மக்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது. இந்த சீரியல் 2019-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஒளிபரப்பானது.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாரதிகண்ணம்மா சீரியல் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்தது. முதலில் ரோஷினி ஹரிப்ரியன் பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் சில காரணங்களால் அவர் சீரியலில் இருந்து வெளியேறினார்.
அதன் பிறகு ரேட்டிங் குறைந்தது. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதனையடுத்து குக் வித் கோமாளியில் ரோஷினி பங்கேற்றார். முன்பு இருந்ததை விட தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரோஷினி அவ்வப்போது போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மார்டன் உடையில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதனை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.