அவர் Ex-Wife கிட்ட பேசிட்டேன்.. நார்வேயில் அப்பா முன்னாடி ப்ரொபோஸ்.. நிச்சயத்துக்கு பின் மனம் திறந்த வரலட்சுமி..!

By Mahalakshmi on ஏப்ரல் 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல நடிகையாக உயர்ந்து இருக்கின்றார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கின்றார்.

   

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக வலம் வருகிறார். ஹீரோயின் கதாபாத்திரம் மட்டுமில்லாமல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசதி வருகின்றார். விஜய்யின் சர்க்கார், விஷாலின் சண்டக்கோழி உள்ளிட்ட திரைப்படங்களில் இவரின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கடந்த மாதம் இவருக்கும் நிக்கோலை சர்ச்தேவ் என்ற தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

   

 

இது தொடர்பான புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து இவர் யார் என்று பலரும் அலசி ஆராய்ந்து விவரங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார்கள். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதாகவும் அவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்கள். இது குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

எனக்கு அவருடைய கடந்த கால வாழ்க்கை பற்றி எந்த கவலையும் கிடையாது .அவரைப் பற்றி பலரும் கேலி கிண்டல் செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நாங்கள் சரியான பொருத்தம் இல்லை என்று கூறுகிறார்கள். இது என்ன சினிமா படமா? ஹீரோ ஹீரோயின் அழகாக இருப்பதற்கு எனக்கு அவரை மிகவும் பிடித்திருக்கின்றது. எனது வாழ்க்கை எனது முடிவு என்று பேசி இருந்தார்.

அது மட்டும் இல்லாமல் அவருடைய முன்னாள் மனைவியிடம் நான் பேசியதாகவும், அவரது மகள் மிகவும் அருமையான ஒரு பெண் என்றும், இந்த வயதில் இவ்வளவு பொறுப்பாக நடந்து கொள்கிறார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் ஒருவரின் திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் அதிலிருந்து வேறு வாழ்க்கைக்கு செல்வதில் எந்த தவறும் இல்லை. அந்த வாழ்க்கைக்குள் வாழ வேண்டும் என்பது கட்டாயமும் கிடையாது என்று பேசி இருந்தார் வரலட்சுமி.