Connect with us

என்னது.. பாடல்கள் இல்லாத படமா.. 2k நாயகனுக்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய அனிருத்..!

CINEMA

என்னது.. பாடல்கள் இல்லாத படமா.. 2k நாயகனுக்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய அனிருத்..!

தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக் ஸ்டார் அனிருத். முதன் முதலாக தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக களம் இறங்கியவர் அனிருத் ரவிச்சந்திரன். தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் பல திரைப்படங்கள் இவரது இசையில் வெளியாகியிருக்கின்றது.

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். இவர் கடைசியாக லியோ திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதைத் தொடர்ந்து தற்போது உலகநாயகன் கமலஹாசனின் இந்தியன் 2, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி, சிவகார்த்திகேயன் திரைப்படம், விக்னேஷ் சிவன் திரைப்படம் என பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

   

 

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியில் ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா என்ற திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகின்றார். இந்நிலையில் தற்போது விஜய் தேவரா கொண்டா நடிப்பில் வெளியாக உள்ள அவரின் 12வது திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பாடல்கள் எதுவும் கிடையாதாம். அதற்கு பதிலாக அனிருத் பின்னணி இசையை இப்படத்தின் மிகப்பெரிய முக்கியத்துவம் என கூறப்பட்டுள்ளது. இதை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top