Connect with us

INSPIRATION

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. அந்த வகையில் தென் கொரியாவில் இருந்து 2019 ஆம் ஆண்டு இந்தியா வந்திறங்கிய கார் நிறுவனம்தான் KIA.

   

2019 ஆம் ஆண்டு KIA நிறுவனம் இந்தியாவில் தனது கிளையை தொடங்க முடிவெடுத்தபோது இந்திய மக்களிடையே கார்கள் குறித்து எப்படிப்பட்ட தேவை இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்தனர். அந்த ஆய்வில் இந்திய மக்கள் SUV வகையான கார்களையே அதிகம் விரும்புகின்றனர் என்று தெரிந்துகொண்டனர்.

Sports Utility Vehicle என்பதுதான் SUV என்பதன் விரிவாக்கம். அதாவது காருக்குள் சொகுசாக அமர்வதற்கு தேவையான இடம் இருக்க வேண்டும். மேலும் இந்தியாவில் உள்ள தார் ரோடுகளில் மட்டுமல்லாது மண் ரோடுகளிலும் அந்த கார் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்திய மக்களின் தேவை இதுவாக இருக்கிறது என்பதை தங்களது ஆய்வின் மூலம் அறிந்துகொண்டனர்.

அதன் பின் KIA நிறுவனம் மற்ற நாடுகளில் உள்ள தங்களது நிறுவனத்தின் கார்கள் போல் அல்லாமல், இந்தியாவிற்கென்றே தனியான சிறப்பம்சங்களோடு கார்களை தயார் செய்தனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களில் பல சிறப்பான தொழில்நுட்பங்களை புகுத்தினார்கள்.

இவ்வாறு இந்திய மக்களின் தேவைக்கு ஏற்பவும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் KIA நிறுவனம் தங்களது நிறுவனத்தின் கார்களை தயாரித்தது. அதன் பின் டாடா, மகேந்திரா, டொயோடா போன்ற கார் நிறுவனங்களின் மார்க்கெட்டிற்கு ஈடான இடத்தை KIA கைப்பற்றியது. KIA நிறுவனம் ஹுண்டாய் நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனம் என பலர் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Continue Reading

More in INSPIRATION

To Top