Categories: சினிமா

வெறும் மூன்று கோடியால் வணங்கான் படத்திற்கு வந்த சோதனை.. எல்லாத்துக்கும் காரணமே பாலா தானா..?

Spread the love

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர்தான் பாலா. தொடர் தோல்விகள், தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் நெகட்டிவ்வான விமர்சனங்கள் என தன்னுடைய கெரியரின் மோசமான காலகட்டத்தில் இருக்கும் பாலா சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் இணைந்தார். ஆனால் படப்பிடிப்பில் சில கசப்பான சம்பவங்கள் நடந்ததால் சூர்யா படத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து அருண் விஜய் கமிட்டானார். இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தில் அருண் விஜய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் இசை அமைக்க பின்னணி இசை சாம் சி.எஸ் போட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இழந்ததை தொடர்ந்து கடந்த ஜனவரி 10ஆம் தேதி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் 3.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும்போது சில வெளிநாடுகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமல்லாமல் தமிழகத்திலும் சில திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. வழக்கமாக மற்ற படங்கள் ரிலீசாகும் நேரத்தை விட வனங்கான் திரைப்படம் தாமதமாகத்தான் ரிலீஸ் ஆனது.

இப்படியான நிலையில் வணங்கான் திரைப்படம் ரிலீஸ் ஆவதில் என்ன சிக்கல் இருந்தது என்பது குறித்த காரணம் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது வணங்கான் படத்தில் எந்த ஒரு கடனும் இல்லாமல் தயாரிப்பாளர் சமாளித்து விட்டார். ஆனால் முதலில் சூர்யா நடிக்க இருந்த சமயத்தில் பாலா படத்தை தயாரித்த போது மூன்று கோடி ரூபாய் மதுரை அன்பு என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். மதுரை அன்பு என்ற பெரிய பைனான்சியர் ஒருவர் உள்ளாராம். அவரை பொதுவாக சினிமா பீல்டில் உள்ளவர்கள் தான் அறிவார்கள். இவர் தனக்கு பாலா கொடுக்க வேண்டிய மூன்று கோடி ரூபாய் கிடைக்காமல் போனதால் வணங்கான் படத்தை வெளியிட முடியாது என்று சங்கத்தில் தடை உத்தரவை வாங்கி விட்டார்.

பாலாவின் அக்கவுண்டில் இருந்து 50 லட்சம் ரூபாய் மட்டுமே டிரான்ஸ்பர் பண்ண முடிந்த நிலையில் இரண்டரை கோடி ரூபாய் அனுப்ப முடியவில்லை. இதனால் வணங்கான் படம் சில இடங்களில் வெளியிட முடியாத நிலை தோன்றியது. இதனைத் தொடர்ந்து பாலா பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் மதுரை அன்பு பேச முடியவில்லை. பலரைத் தொடர்பு கொண்டு விடிய விடிய பாலா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த இரண்டரை கோடி ரூபாய் பணத்தை மதுரை அன்புவின் வங்கி கணக்குக்கு அனுப்பிய பிறகுதான் தடை உத்தரவை அவர் நீக்கியுள்ளார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் மதுரை அன்பு இப்படியான சூழலில் தனது மொபைல் போனை எப்போதும் சுவிட்ச் ஆப் செய்து விடுவாராம். பணம் தன்னுடைய கைக்கு வந்த பிறகு தான் அவர் இயக்குனர்களோடு பேசுவாராம். இப்படியான சிக்கலில் தான் வணங்கான் திரைப்படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

4 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

5 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

5 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

5 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

5 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

5 மணத்தியாலங்கள் ago