உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் காட்டும் கவனத்தை, எதனை எதனுடன் சேர்த்துச் சாப்பிடுகிறோம் என்பதிலும் காட்ட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா எச்சரிக்கிறார். குறிப்பாக, அதிக இனிப்புள்ள பழங்களை மாவுச்சத்து நிறைந்த உணவுகளோடு சேர்த்து உண்பது இன்சுலின் அளவை உயர்த்தி கொழுப்பு சேமிப்பை அதிகப்படுத்தும்.
அதேபோல், பொரித்த உணவுகளைச் சப்பாத்தி அல்லது சாதத்துடன் அதிகளவில் சேர்ப்பது செரிமானத்தைத் தாமதப்படுத்தி உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்பதால் இத்தகைய உணவு இணைகளைத் தவிர்ப்பது நல்லது.
காலை நேரத்தில் சர்க்கரை கலந்த காபி அல்லது டீ குடிப்பதும், உணவருந்தும் போது இடையிடையே குளிர்பானங்கள் மற்றும் சோடா அருந்துவதும் எடை குறைப்பு முயற்சியைக் கெடுக்கும். காஃபினுடன் சேரும் சர்க்கரை உடலில் அழுத்த ஹார்மோனைத் தூண்டி அதிகப்படியான பசியை உண்டாக்கும்.
திரவ வடிவில் உட்கொள்ளும் தேவையற்ற கலோரிகள் மூளையின் ‘வயிறு நிறைவு’ சமிக்ஞையைத் தடுத்து அதிக உணவு உண்ணத் தூண்டும். எனவே, எடையைக் கட்டுக்குள் வைக்க முறையான உடற்பயிற்சியுடன் இத்தகைய தவறான உணவுச் சேர்க்கைகளையும் தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு…
புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தன் எதிரொளியாக சிகரெட் விலை அதிகரிக்கும் என்று…
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வெல்லத்தில், லாபத்திற்காகச் சுண்ணாம்பு, செயற்கை நிறங்கள் மற்றும் சோள மாவு போன்ற…
குறைந்த முதலீட்டில் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘அடல் ஓய்வூதியத் திட்டம்’ தற்போது அனைத்து அஞ்சலகங்களிலும்…
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் விரைவாகச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக் (FASTag) நடைமுறையில், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் முக்கியத்…