Categories: சினிமா

தங்கள் தோல்விப் படக் கதையையே மீண்டும் எடுத்து சூப்பர்ஹிட் கொடுத்த AVM நிறுவனம்… இந்த படத்துக்குப் பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?

Spread the love

தமிழ் சினிமாவில் 40 களில் இருந்து 70 களின் இறுதிவரை தொடர்ச்சியாக படங்கள் எடுத்து இந்தியா முழுவதும் அவற்றை ரிலீஸ் செய்து வெற்றிகொடி நாட்டிய நிறுவனம் ஏவிஎம். அந்த நிறுவனத்தின் நிறுவனர் ஏ வி மெய்யப்ப செட்டியார் இறந்த போது சில ஆண்டுகள் அவர்கள் படம் தயாரிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கி செகண்ட் இன்னிங்ஸிலும் வெற்றி கண்டது. அப்போது ஏவிஎம் நிறுவனம் முரட்டுக்காளை மற்றும் சகலகலா வல்லவன் ஆகிய படங்கள் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து படங்கள் தயாரித்தனர். அப்போது மாஸ் ஹீரோக்களுக்கான படங்கள் மட்டும் இல்லாமல், குடும்ப ரசிகர்களுக்கான குடும்பக் கதை கொண்ட படங்களையும் எடுத்தனர்.

அப்படி அவர்கள் தயாரித்த படங்களில் ஒன்றுதான் பாண்டியராஜன், ஊர்வசி மற்றும் மனோரமா நடித்த பாட்டி சொல்லைத் தட்டாதே. இந்த படத்தை இயக்குனர் ராஜசேகர் இயக்கினார். சந்திரபோஸ் இசையமைக்க வைரமுத்து பாடல்களை எழுதினார். இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்த படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமே படத்தில் பாண்டியராஜனுக்கும் மனோரமாவுக்கும் இடையில் நடக்கும் நகைச்சுவைக் கலந்த பாசப்போராட்டமே. அதேபோல க்ளைமேக்ஸ் காட்சியில் படத்தில் இடம்பெற்ற சூப்பர் கார் செய்யும் மேஜிக் விஷயங்கள்தான். இப்படி சூப்பர் ஹிட்டான இந்த படம் அதற்கு முன்பு வந்த ஒரு தோல்விப் படத்தின் கதை என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆம்… பாட்டி சொல்லை தட்டாதே படம், 1959இல் வெளிவந்த படம் மாமியாரை மெச்சின மருமகள் என்ற படத்தின் தழுவலில் உருவாக்கப்பட்டது. இந்த படத்தைத் தயாரித்ததும் ஏவிஎம் நிறுவனம்தான்.  இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆனால் அந்த கதையின் மேல் நம்பிக்கை வைத்து அதை லேசாக மாற்றி சித்ராலயா கோபு கைவண்ணத்தில் பாட்டி சொல்லைத் தட்டாதே திரைப்படத்தை எடுத்து வெற்றிப்படமாக்கினர் ஏவிஎம் நிறுவனத்தார்.

vinoth

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

4 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

5 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

6 மணத்தியாலங்கள் ago