#image_title
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் வெற்றியாக அமைந்தது.
சிவாஜியின் நடிப்பை பல இயக்குனர்கள் மெருகேற்றினார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் வியட்நாம் வீடு சுந்தரம். இவர் ஒரு இயக்குனராக பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் முன்னணி நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். வெள்ளித் துறையில் மட்டும் இன்றி சின்னத்திரையிலும் கால் பதித்து உச்சத்தை தொட்டவர். இவர் இயக்கத்தில் சிவாஜி நடித்த கௌரவம் திரைப்படம் சிவாஜியின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் படமாக அமைந்தது.
கௌரவம்’ படத்திற்காக டி எம் எஸ் ‘நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா…’ மிகவும் வித்தியாசமாகப் பாடியுள்ளார். இந்தப் பாடலை சிவாஜி 11 தடவை கேட்ட போதும் சிவாஜிக்கு ஷூட்டிங் செல்ல தைரியம் இல்லையாம். இத்தனைக்கும் எந்த ஒரு பாடலையும் 2 தடவை கேட்டதுமே ஸ்பாட்டுக்கு நடிக்கச் சென்று விடுபவர் சிவாஜி.
இதனால் அந்த படத்தின் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரத்திடம் சென்று ‘சுந்தரா… கொஞ்சம் டைம் கொடு. சூட்டிங்கை அப்புறம் வச்சிக்கலாம்னு’ கூறியுள்ளார். இதைக் கேட்ட அவர் பதறியடித்து என்ன காரணம் என்று கேட்க அதற்கு சிவாஜி “இந்த பாடலில் டி எம் எஸ் எனக்கு பெரிய சவாலே கொடுத்துள்ளார். இந்த பாடலை அவர் வேறு மாதிரி பாடி நான் செய்ய வேண்டிய வேலைகளை அவரே பாதி செய்துள்ளார். அதனால் அந்த பாடலில் நான் ஏதாவது செய்து அவரின் சவாலை வெல்ல வேண்டும். அதுக்கு கொஞ்சம் டைம் கொடு” என சொல்லிவிட்டு மேலும் சில முறைக் கேட்டுவிட்டுதான் அந்த பாடலுக்கான ஷூட்டிங்கில் நடித்தாராம்.
சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…
அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…
சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…