பெங்களூரில் பயங்கரம்: முதல் திருமணத்தை மறைத்து.. 2வது மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற ஆட்டோ டிரைவர்… நெஞ்சை உலுக்கும் பின்னணி…!

Spread the love

பெங்களூரு மகதி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் பவானி, அங்குள்ள செல்போன் கடையில் பணிபுரிந்து வந்தபோது ஆட்டோ ஓட்டுநரான சந்திரசேகர் (33) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. தனக்கு ஏற்கனவே திருமணமாகி 6 வயதில் குழந்தை இருப்பதை மறைத்த சந்திரசேகர், கடந்த ஆண்டு பவானியை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். நாளடைவில் கணவனின் முதல் திருமண ரகசியத்தை அறிந்த பவானி, அதிர்ச்சியடைந்து அவரை விட்டு பிரிந்து வாழ முடிவு செய்ததுடன், இதுகுறித்து தனது பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் பவானிக்கு வேறு திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பவானி தன்னை விட்டு பிரிந்துவிடுவார் என்ற அச்சத்தில் சந்திரசேகர் அவரைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில், அதற்கு பவானி உடன்படவில்லை. இதனால் பவானியைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள சந்திரசேகர் திட்டமிட்டுள்ளார். அதன்படி, பவானிக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்துள்ளார்; ஆனால் பவானி அதை வாந்தி எடுத்ததால் உயிர் பிழைத்துவிடுவாரோ என்ற பயத்தில், வீட்டில் இருந்த கத்தியால் அவரைச் சரமாரியாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் தானும் விஷம் குடித்து மயங்கியுள்ளார்.

மகள் இருக்கும் இடத்தைத் தேடிவந்த பவானியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த பவானியின் உடலை மீட்டதுடன் மயங்கிக் கிடந்த சந்திரசேகரையும் மீட்டு சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்குப் பின் குணமடைந்த சந்திரசேகர், போலீசாரிடம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை முறைப்படி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றியதுடன், பிரிய முயன்ற இரண்டாவது மனைவியைக் கணவனே திட்டமிட்டுக் கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

4 minutes ago

“பாஜகவை விட்டு ஓடியவர்கள் ஓடோடி வராங்க.. நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அந்த ‘மாஸ்’ அறிவிப்பு.. அதிரும் தமிழக அரசியல்”..!!

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்…

6 minutes ago

“பகீர் சம்பவம்…! சொகுசு குடியிருப்பில் சொந்த ஊழியரையே கொடூரமாகக் கொலை செய்த டாக்டர்… டெல்லியில் பரபரப்பு…!”

டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக…

19 minutes ago

ரயில் டிக்கெட் விலையில் 75% வரை தள்ளுபடி.. இந்திய ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?.. இதோ முழு விபரம்..!!

அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…

27 minutes ago

நெஞ்சை உலுக்கும் பயங்கரம்…! நடுவானில் 20 மீட்டர் உயரத்தில் தவித்த இளைஞர்கள்… தலைகீழாக மாறிய சுற்றுலா…!!

ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…

28 minutes ago

மும்பையிலேயே மராத்திக்கு அவமரியாதையா…? ரயில் நிலையத்தில் பயணியிடம் சீறிய ஊழியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தகவல் மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…

35 minutes ago