அடேய்… மராத்தி கத்துக்கோ… இல்லனா கெளம்பு… ரயிலுக்குள்ளேயே ஆட்டோவை ஏற்றித் தப்பியோட முயற்சி?… வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை… மகாராஷ்டிராவில் பரபரப்பு…!

Spread the love

மகாராஷ்டிராவில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சிலர் ஒரு ஆட்டோ ரிக்ஷாவை ரயிலின் லக்கேஜ் பெட்டிக்குள் பலவந்தமாகத் தள்ளி ஏற்ற முயல்வது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை சமூக வலைத்தளப் பயனர் ஒருவர் பகிர்ந்து, “RTO நடவடிக்கைக்கு பயந்து மராத்தி கற்க விரும்பாத ஓட்டுநர்கள் தங்கள் ஊருக்குத் தப்பியோடுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ள பதிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த வீடியோவின் உண்மை பின்னணி மற்றும் ஓட்டுநர்கள் உண்மையிலேயே தப்பியோடுகிறார்களா என்பது தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், மாநில அரசின் தீவிர நடவடிக்கைக்கு மத்தியிலேயே இது வைரலாகியுள்ளது. மகாராஷ்டிர போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 1,430 ஓட்டுநர்களில் 422 பேருக்கு போதிய மராத்தி பேசும் திறன் இல்லாததால் அவர்களுக்குக் காரணம் கேட்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் அடிப்படை மராத்தி கற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் அபாயமும் உள்ளது.

https://www.instagram.com/reel/DcReiMRCGx4/?utm_source=ig_web_button_share_sheet

இந்தச் சம்பவங்களின் பின்னணியில், “எல்லோரும் மராத்தி கற்றுக் கொள்ளுங்கள், ஓட வேண்டிய அவசியமில்லை; இங்கு சம்பாதிக்கும் போது உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்வது நல்லது” என்ற கருத்துக்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அதேவேளையில், மொழி சார்ந்த இந்த அதிரடி நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் வேற்று மாநில ஓட்டுநர்களிடையே பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளன.

Swetha

Recent Posts

BREAKING: “அரசியலில் திடீர் புயல்”…. பாஜகவில் இணைந்த கையோடு சாய்னா நேவால் கொடுத்த ‘மாஸ்’ ஸ்டேட்மென்ட்….!

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் பாஜக இணைந்து தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். கட்சியில் இணைந்தது…

3 minutes ago

அவங்களாம் மனுசங்களா..! “3 மாத கருவோடு பிரிந்த உயிர்…” பெண் அதிகாரிக்கு நேர்ந்த கொடுமை… டெல்லி போலீசாரின் அதிரடி ஆக்ஷன்…!!

டெல்லியின் துவாரகா பகுதியில் வசித்து வந்த 30 வயதான நாசியா கானம் என்ற மத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி,…

8 minutes ago

“பாவம் அதுவும் உயிர் தானே…” ரூ.2 லட்சம் புல்லட் பைக்கை சேதப்படுத்திய எலிகள்…. 6 மாதங்கள் கழித்து பார்த்த உரிமையாளருக்கு ஷாக்…. வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்…!!

சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கை நிறுத்திவிட்டுச் சென்ற உரிமையாளர் ஒருவர், 6 மாதங்கள் கழித்து…

9 minutes ago

“நீண்ட நாள் காத்திருப்பு…” வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய கணவர்… கதவை திறந்ததும் கதறி அழுது காலில் விழுந்த மனைவி…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகப் பல ஆண்டுகள் வெளிநாட்டில் தங்கி உழைத்த நபர் ஒருவர், நீண்ட இடைவெளிக்குப்…

16 minutes ago

குழந்தையின் தந்தை யார்?… 5 வயதில் அம்மாவான சிறுமி..! மருத்துவர்களுக்கே சவால் விட்ட அரிய சம்பவம்… வரலாற்றின் விடைதெரியாத மர்மம்…!!

1939-ஆம் ஆண்டு பெரு நாட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவம் மருத்துவ உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. லீனா மெடினா என்ற 5 வயது…

18 minutes ago

“வேலை முடிந்து தலையில் குடத்துடன் நடந்த பெண்…” சட்டென பாய்ந்த மின்னால்… அடுத்த நொடியே அரங்கேறிய சோகம்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டத்தில், வயலில் வேலை செய்துவிட்டுத் திரும்பிய பெண் ஒருவர் மீது மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம்…

28 minutes ago