குழந்தையின் தந்தை யார்?… 5 வயதில் அம்மாவான சிறுமி..! மருத்துவர்களுக்கே சவால் விட்ட அரிய சம்பவம்… வரலாற்றின் விடைதெரியாத மர்மம்…!!

Spread the love

1939-ஆம் ஆண்டு பெரு நாட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவம் மருத்துவ உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. லீனா மெடினா என்ற 5 வயது சிறுமியின் வயிறு அசாதாரணமாக வீங்கியிருந்ததைக் கண்டு பயந்த பெற்றோர், கட்டியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். ஆனால், அவள் ஏழு மாத கர்ப்பமாக இருக்கிறாள் என்று மருத்துவர்கள் அதிர்ச்சியளிக்கும் தகவலைத் தெரிவித்தனர். அதன்படி, மே 14, 1939-ல் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் லீனா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, உலகின் மிக இளம் வயது தாய் என்ற பெயரைப் பெற்றார். இருப்பினும், அந்தக் குழந்தையின் தந்தை யார் என்ற மர்மம் இன்றுவரை விலகவே இல்லை.

இவ்வளவு சிறிய வயதில் ஒரு சிறுமி கர்ப்பமானதற்கு ‘முன்கூட்டிய பருவமடைதல்’ என்ற அரிய மரபணுக் குறைபாடே முக்கியக் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தப் பிரச்சனையால் லீனாவுக்கு எட்டு மாத குழந்தையாக இருக்கும்போதே மாதவிடாய் தொடங்கி, அவளது உடல் வளர்ச்சி மிக விரைவாக முதிர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. இந்தச் சம்பவத்தில் லீனாவின் தந்தை மீது ஆரம்பத்தில் சந்தேகம் எழுந்து அவர் கைது செய்யப்பட்டாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். ஊடகங்கள் பல்வேறு விதமாக ஊகித்தாலும், லீனாவுக்கு நேர்ந்த அந்தத் துயரத்திற்கு யார் காரணம் என்பது கடைசிவரை நிரூபிக்கப்படாமலேயே போனது.

இந்தச் செய்தி உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியபோதும், பண ஆசையோ புகழோ வேண்டாம் என லீனாவின் குடும்பத்தினர் ஊடக வெளிச்சத்தை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டனர். லீனாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஜெரார்டோவின் பெயரையே அவளது குழந்தைக்கும் வைத்தனர். சிறுவன் ஜெரார்டோவுக்கு 10 வயது வரை லீனா தனது அக்கா என்றே நினைத்து வளர்ந்து, எதிர்பாராதவிதமாகத் தனது 40-வது வயதில் எலும்பு நோய் காரணமாக உயிரிழந்தார். லீனா தனக்கு உதவிய மருத்துவரிடமே செயலாளராகப் பணிபுரிந்து தனது கல்வியையும் மகனின் கல்வியையும் தொடர்ந்தார். பின்னர் 1970-களில் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு இன்னொரு குழந்தையையும் பெற்றெடுத்தார். எண்ணற்ற மர்மங்களைத் தன்னகத்தே கொண்ட லீனா, தற்போது உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.

Gayathri

Recent Posts

திடீர் திருப்பம்…. சலசலப்புக்கு நடுவே எடப்பாடியை ‘அண்ணன்’ என அழைத்த எஸ்பி வேலுமணி…. ஒற்றை வார்த்தையால் உறைந்துபோன பேரவை….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று வரும் துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு…

10 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் போட்ட ‘பாம்’…. பரந்தூர் திட்டம் திடீர் ரத்து…. பின்னணியில் அமித்ஷா போட்ட கணக்கு?…. வெளியான சீக்ரெட் பிளான்…!

பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது, தமிழக அரசியல் மற்றும் பொருளாதாரக் தளங்களில்…

27 minutes ago

“என்கிட்ட ஆதாரம் இருக்கு…. நாங்களே லஞ்சம் கொடுத்தோம்”….. சட்டப்பேரவையில் அமைச்சர் மரியவில்சன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்..!

கடந்த ஆட்சிக்காலத்தில் தனியார் மற்றும் சிறுபான்மையினப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்காகக் கட்டாயப்படுத்திப் பணம் வசூலிக்கப்பட்டதாக நிதியமைச்சர் மரியவில்சன் சட்டப்பேரவையில் புயலைக்…

37 minutes ago

“தூக்கத்தில் விழுந்த அடி”…. TVK அரசுக்கு வந்த முதல் ஆபத்து…. 100 ஏக்கர் நிலப்பரப்பு ரகசியம் அம்பலம்…..!

ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம் என்ற முதன்மை முழக்கத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, ஆட்சிப் பொறுப்பேற்ற…

47 minutes ago

“பேசவே அசிங்கமா இல்லையா?…. வன்மத்தின் உச்சம் செங்கோட்டையன்”…. கொந்தளித்த டிடிவி தினகரன்…. அரசியலில் அடுத்த பூகம்பம்…!

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாகவும் அவை முன்னவராகவும் செயல்பட்டு வரும் கே.ஏ. செங்கோட்டையன், சமீபத்தில்…

51 minutes ago

திமுகவுக்கு விழுந்த ‘மெகா’ செக்?… 5 சிட்டிங் MLA-க்கள் தவெக பக்கம்?…. அறிவாலயத்தில் திடீர் பரபரப்பு… CM விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ்..!

தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்த கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், தமிழக வெற்றி கழகத்திற்கு தனித்து…

1 மணத்தியாலம் ago