அனைவருக்கும் மாதம் ரூ.5,000 தரும் சூப்பர் திட்டம்… மாதம் வெறும் ரூ.42 முதலீடு செய்தால் போதும்….!

Spread the love

நாட்டு மக்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு பொருளாதார மற்றும் சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதன்படி ஏழைகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த தனி நபர்கள், அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் ஆகியோருக்கு பொருளாதார பாதுகாப்பு வழங்கும் வகையில் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியால் கடந்த 2016 ஆம் ஆண்டு மூத்த குடிமக்களுக்காக பிரத்தியேகமாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாதம் தோறும் ஒருவர் ஐந்தாயிரம் ரூபாய் ஓய்வூதியமாக பெற முடியும். இந்த திட்டத்தில் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்வதன் மூலமாக ஓய்வுக்கு பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தை பயனாளர் பெறலாம். அமைப்புசாரா துறையில் இருக்கின்றவர்களின் எதிர்கால பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நிதி உதவி வழங்கும் இந்த திட்டத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு டெபாசிட் செய்பவர்கள் ஓய்வூதியம் பெறலாம்.

இந்த திட்ட மூலம் முறையான ஓய்வூதிய திட்டம் இல்லாத சிறு வணிகர்கள், சுய தொழில் செய்பவர்கள் மற்றும் தினசரி ஊதியம் பெறுபவர்கள் இந்த திட்டத்தின் பலனை பெற முடியும். 18 முதல் 40 வயதிற்கு உட்பட்ட யார் வேண்டுமானாலும் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் டெபாசிட் செய்து கொள்ள முடியும். குறைந்த அளவில் ஏழு ரூபாய் முதலீட்டில் இந்த திட்டத்தில் ஒருவர் இணைந்து கொள்ளலாம். அதாவது அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் தினமும் 7 ரூபாய் வீதம் மாதம் தோறும் 210 ரூபாய் முதலீடு செய்யலாம்.

இதன் மூலமாக மாதந்தோறும் 60 வயதை அடையும் போது ஓய்வூதியமாக ஐந்தாயிரம் ரூபாய் பெறலாம். இந்த திட்டத்தில் 40 வயதில் ஒருவர் இணைந்தால் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் பெறுவதற்கு 1,454 ரூபாய் ப்ரீமியமாக செலுத்த வேண்டும். பிரீமியம் செலுத்துவதை பொறுத்து ஓய்வூதிய பெறலாம். மேலும் இந்தத் திட்டத்தில் 42 ரூபாய் முதல் 210 ரூபாய் வரை மாதம் தோறும் செலுத்தலாம். அடல் பென்ஷனா யோஜனா திட்டத்தின் கீழ் தபால் அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை தனியார் வங்கிகளில் கணக்கு தொடங்கி டெபாசிட் செய்து கொள்ளலாம். சிறுவயதில் இருந்து சேமித்து நீண்ட கால பலனை பெற அடல் பென்ஷன் யோஜனா திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

4 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

4 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

4 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

5 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

5 மணத்தியாலங்கள் ago