திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு வெற்றி பெற்றதை தொடர்ந்து மகளிர் அணியினர் உற்சாகமடைந்துள்ளனர். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இளைஞர் அணிக்கு போட்டியாக 20 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கட்சி தலைமையிடம் மகளிர் அணி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. திமுக ஆட்சியை இரண்டாம் முறையாக தக்க வைத்துக் கொள்ளும் இலக்குடன் தேர்தல் பணிகளில் திமுக முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றது. சமீபத்தில் திமுகவின் இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகளின் மாநாடு திருவண்ணாமலையில் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
அந்த மாநாட்டைத் தொடர்ந்து வருவாய் மாவட்டத்திற்கு ஒரு தொகுதி என்ற அடிப்படையில் 40 தொகுதிகளை கட்சி தலைமையிடம் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏற்கனவே கேட்டுள்ளனர். இப்படியான நிலையில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு எதிர்பார்த்ததை விட கூடுதலாக பெண்கள் கூடியதால் உற்சாகமடைந்த மகளிர் அணி நிர்வாகிகள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இளைஞர் அணிக்கு நிகராக 20 சீட்டுகளில் போட்டியிட வேண்டும் என்று கனிமொழியிடம் விருப்பம் தெரிவித்துள்ளன.
கடந்த சட்டசபை தேர்தலில் மகளிர் அணிக்கு ஐந்து தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இந்த முறை தமிழக வெற்றிக்கழகம் கட்சி களத்தில் இறங்கி இருப்பதால் மகளிர் அணிக்கு 20 தொகுதிகள் வரை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மகளிர் அணியினரின் எதிர்பார்ப்பு. இது தொடர்பாக ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் நிலையில் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. ஏற்கனவே ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம் தொகுதிகள் கேட்டு தலைவலியை கொடுத்து வர மறுபக்கம் உதயநிதி இளைஞர் அணிக்காக குரல் கொடுக்க தற்போது கனிமொழியும் மகளிர் அணிக்கு எதிராக குரல் கொடுப்பது ஸ்டாலினுக்கு புதிய சிக்கலை உண்டாக்கியுள்ளது
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…