கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல் என எந்த ஒரு தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற முடியவில்லை. இதனால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைக்கின்றார். அதனால் திமுகவை எதிர்க்கும் பாஜகவோ ஏற்கனவே அதிமுக கூட்டணி அமைத்துவிட்டது. ஒரு பக்கம் திமுகவை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருக்கும் விஜய் தங்கள் பக்கம் இருக்கும் முயற்சியில் ஈபிஎஸ் இறங்கினார். திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் விஜய் அதிமுகவுடன் இணைய வேண்டும்.
தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு பயிற்சி தேவை. அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அதிமுகவினர் வழங்குவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வெளிப்படையாக கூறியிருந்தனர். இதனிடையே கரூர் சம்பவத்தில் திமுகவிற்கு எதிராகவும் விஜய்க்கு ஆதரவாகவும் எடப்பாடி பேசத் தொடங்கினார். எப்படியும் விஜய் தனது கூட்டணிக்கு வந்து விடுவார் என்று அவர் நம்பிக்கையாக இருந்த நிலையில் அவர் நினைத்தபடி விஜய் அதிமுக கூட்டணிக்கு இதுவரை வந்து சேரவில்லை.
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது, கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட்டுகள் ஒதுக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணி மற்றும் தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை செய்யப்படும் நிலையில் கூட்டம் முடிந்த பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…