14 வயது மாணவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய ஆசிரியை… ஆசிரியர் – மாணவர் உறவில் நேர்ந்த கொடூரம்… நீதிமன்றத்தில் மாணவன் உடைத்த பகிர் உண்மை…!

Spread the love

அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் உள்ள சவுத் டியர்போர்ன் நடுநிலைப் பள்ளியில், 14 வயது மாணவனுக்குத் தனது நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பி, காதலிப்பதாகக் கூறி வந்த 21 வயது மாற்று ஆசிரியை காசிடி கார்ட்டருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு ‘ஸ்னாப்சாட்’ செயலி மூலம் அந்த மாணவருடன் தொடர்பிலிருந்த ஆசிரியை, நள்ளிரவு நேரங்களில் ஆபாசப் படங்களையும் குறுஞ்செய்திகளையும் அனுப்பி, அவனுடன் உடலுறவு கொள்ள விரும்புவதாக வற்புறுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து அதிர்ச்சியடைந்த மாணவன் பள்ளிப் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய செல்போன் சோதனையில் ஆசிரியையின் அத்துமீறல்கள் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டன.

பாதிக்கப்பட்ட மாணவன் பின்னர் அந்தப் பகுதியை விட்டு இடம்பெயர்ந்ததோடு, நீதிமன்ற விசாரணைகளில் தொடர்ந்து பங்கேற்க விருப்பமில்லை எனத் தெரிவித்ததால், அவர் மீதான கடுமையான குழந்தைத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. இருப்பினும், விசாரணையில் கிடைத்த வலுவான ஆதாரங்களின் அடிப்படையில், தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டை காசிடி கார்ட்டர் ஒப்புக்கொண்டதால் அவருக்கு இந்த இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் – மாணவர் இடையேயான புனிதமான உறவைத் தவறாகப் பயன்படுத்தி, சமூக ஊடகங்கள் மூலம் சிறார்களைக் குறிவைக்கும் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், இதனைத் தடுக்கப் பெற்றோர்களும், பள்ளி நிர்வாகங்களும், மாணவர்களும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Visaka

Recent Posts

“நானும் விஜய் ரசிகன்தான்”…. மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் ஓபன் டாக்…. கொந்தளிப்பில் அறிவாலயம்…. ஆடிப்போன ஸ்டாலின்…!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம்…

9 minutes ago

ரெய்டு நடக்கும் போது அன்பில் மகேஷ் கொடுத்த சீக்ரெட் கால்…. நேரில் விரைந்த கே.என். நேரு… கதவைச் சாத்திய போலீசார்…. அடுத்து நடந்த பரபரப்பு….!

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில்,…

21 minutes ago

“அவரு யாருங்க இப்போ?”… செல்வப்பெருந்தகையை வெளுத்து வாங்கிய பிரவீன் சக்கரவர்த்தி…. காங்கிரஸ் – தவெக கூட்டணியில் வெடித்த மோதல்…!

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் எதற்கு கூட்டணி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி…

33 minutes ago

“அன்பில் மகேஷ் வீட்டில் 8 மணி நேர ரெய்டு”…. காரணமே இதுதானா?…. சற்றுமுன் அவரே கொடுத்த பரபரப்பு பேட்டி…. அரசியலில் அடுத்த புயல்….!

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார்…

43 minutes ago

அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு…. யாருடைய குரல்வளையையும் நெறிக்கல…. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கொடுத்த ‘ஷாக்’ ரியாக்ஷன்….!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்று வரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் சோதனை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப்…

51 minutes ago

அமைச்சர் பதவியில் இருந்து சரத் நீக்கம்?…. லண்டனில் இருந்து உத்தரவிட்ட விஜய்… தாம்பரம் டெண்டர் ஊழலில் அடுத்த விக்கெட்…..!

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் கோருவதற்கு முன்பே ரூ. 45.9 லட்சம் மதிப்பிலான அழகுபடுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்ட விவகாரம், தமிழக…

57 minutes ago