“மணிக்கு 154.2 கி.மீ வேகம்” அடுத்த உம்ரான் மாலிக் தயார்..? பேட்ஸ்மேன்களுக்கு மரண பயத்தைக் காட்டிய அசோக் சர்மா..!!

Spread the love

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த 23 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் அசோக் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். அகமதாபாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில், அசோக் சர்மா தனது 16-வது ஓவரின் கடைசி பந்தை மணிக்கு 154.2 கி.மீ வேகத்தில் வீசி அசத்தினார். இது இந்த ஐபிஎல் சீசனின் அதிவேகப் பந்தாகப் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக டெல்லி அணியின் அன்ரிச் நோர்ஜே வீசிய 150.7 கி.மீ வேகமே சாதனையாக இருந்தது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அசோக் சர்மா, ஆரம்பத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நெட் பவுலராகவே தனது பயணத்தைத் தொடங்கினார். இவரது அபாரமான வேகத்தைக் கண்டு வியந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கடந்த 2022-ம் ஆண்டு ஏலத்தில் இவரை 55 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. பின்னர் கடந்த சீசனில் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் திரும்பிய இவர், தற்போதைய 2026-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 90 லட்சம் ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு விளையாடி வருகிறார்.

நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அசோக் சர்மா 37 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பந்துவீச்சில் சராசரியாக 140 கி.மீ வேகத்தைத் தக்கவைத்த இவருக்கு, காயம் ஏதும் ஏற்படாமல் இருந்தால் இந்த சீசனில் பெரும் ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 11 டி20 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அசோக் சர்மா, முதல் தரப் போட்டிகள் மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளிலும் சிறப்பான விக்கெட் வேட்டையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

5 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

5 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

5 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

6 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

6 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

6 மணத்தியாலங்கள் ago