#image_title
முன்னணி நடிகரான அருண் விஜய் தமிழ், மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 1995-ஆம் ஆண்டு சுந்தர்.சி-யின் இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.
இதனையடுத்து கடந்த 1998-ஆம் ஆண்டு ரிலீசான துள்ளித் தெரிந்த காலம், 2001-ஆம் ஆண்டு ரிலீசான பாண்டவர் பூமி ஆகிய படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று வந்தது. செக்க சிவந்த வானம், அத்தியாயம் 1, தடம் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் அருண் விஜய்.
கடைசியாக ஏ.எல் விஜய் இயக்கத்தை அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சாப்டர் ஒன், அச்சம் என்பது இல்லையே ஆகிய படங்கள் வெற்றி பெற்றது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் திரைப்படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி அருண் விஜய் நடிக்கும் 36 ஆவது படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.
இந்த நிலையில் அருண் விஜய் சமூக வலைதள பக்கத்தில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அந்த போட்டோஸ் வேகமாக பரவி வருகிறது.
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…