விஜயகாந்த் தமிழர்களின் நெஞ்சங்களை ஆட்கொண்ட நடிகராக திகழ்ந்து வந்தவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கொடிகட்டி பறக்கத்தொடங்கிய காலகட்டத்தில் தனக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்டு மக்களின் மனதை கவர்ந்தவர்தான் விஜயகாந்த். அப்படிப்பட்ட விஜயகாந்தையே திரையுலகம் ஒரு கட்டத்தில் ஒதுக்கி வைத்துவிட்டதாம்.
அனைத்து நடிகர்களுக்கும் அவர்களது கெரியரில் ஏறுமுகம் இறங்குமுகம் என இரண்டும் கலந்தே இருக்கும். விஜயகாந்திற்கும் இது விதிவிலக்கு அல்ல. ஒரு காலகட்டத்தில் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட விஜயகாந்த் திரைப்படங்கள் தொடர்ந்து ஃப்ளாப் ஆனதாம். இதனால் விஜயகாந்த்தை வைத்து படமெடுக்க யாரும் முன்வரவே இல்லையாம். 2 ஆண்டுகள் படமே நடிக்காமல் இருந்தாராம்.
இந்த நிலையில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஹாலிவுட்டில் வெளிவந்த “மேட்மாக்ஸ்” என்ற திரைப்படத்தை பார்த்துவிட்டு இதனை தமிழில் தழுவி படமாக்கலாம் என்று முடிவெடுத்தாராம். அவ்வாறு தயாரிப்பாளர் பி.எஸ்.வீரப்பாவை சந்தித்து அந்த கதையை கூறியிருக்கிறார். அவரும் ஓகே சொல்ல, விஜயகாந்தை கதாநாயகனாக நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதாம்.
அதனைத் தொடர்ந்து முதல் நாள் படப்பிடிப்பில் விஜயகாந்த்திற்கு வசனம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரால் வசனமே பேசமுடியவில்லையாம். இரண்டு வருடங்கள் திரைப்படங்களில் நடிக்காமல் போனதால் அவரால் சரளமாக வசனம் பேச முடியவில்லையாம்.
அன்றைக்கு விஜயகாந்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு வேறு நடிகர்களின் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். அடுத்த நாள் மீண்டும் வந்த விஜயகாந்த், அவருக்கு கொடுக்கப்பட்ட வசனத்தை கச்சிதமாக அவரது பாணியில் பேசினாராம். இதனை பார்த்து ஆச்சரியப்பட்ட படக்குழுவினர் கைத்தட்டி பாராட்டினார்களாம்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…