#image_title
தமிழ், மலையாளம் என திரையுலகில் கலக்கி கொண்டிருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் பகத் பாசில். இவர் 2002-ல் ஆண்டு தனது தந்தை பாசில் இயக்கிய கையேதும் தூரத் என்கிற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து 2011-ம் ஆண்டு பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த சப்பா குரிஷு என்கிற திரில்லர் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அப்படத்திற்காக அவருக்கு கேரள அரசின் மாநில விருதும் கிடைத்தது.
அழகாக இருந்தால் தான் சினிமாவில் சாதிக்க முடியும் என்கிற மாய பிம்பத்தை தகர்த்தெறிந்தவர் பகத். இவர் உயரமாகவோ, ஹேண்ட்சம் ஆகவோ இல்லாவிட்டாலும் இவரின் நடிப்புத் திறமையால் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். தமிழிலும் நான்கு தரமான படங்களில் நடித்திருக்கிறார் பகத் பாசில், அவர் முதன்முதலில் கோலிவுட்டில் நடித்த திரைப்படம் வேலைக்காரன். அப்படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசில், பின்னர் தியாகராஜா குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.
இதையடுத்து கடந்த ஆண்டு கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் அமர் என்கிற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் மாமன்னன். பொதுவாக படத்தில் ஹீரோ கதாபாத்திரம் தான் ரசிகர்களால் கொண்டாடப்படும். ஆனால் இத்திரைப்படத்திலோ வில்லனாக நடித்த நடிகர் பஹத் பாசிலின் ரத்னவேல் கதாபாத்திரம் சமூகவலைத்தளங்களில் கொண்டாடப்பட்டது. தற்பொழுது இவர் தமிழ் மலையாளம் என பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்பொழுது மலையாளத்தில் நடிகர் பஹத் பாசிலின் நடிப்பில் ‘ஆவேசம்’ எனும் திரைப்படம் வெளிவந்துள்ளது. இப்படத்தை ஜித்து மாதவன் என்பவர் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ரோமச்சன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி உலகளவில் வெளிவந்த ‘ஆவேஷம்’ திரைப்படம் மூன்று நாட்களில் ரூ. 33 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு இருப்பதால், இனி வரும் நாட்களிலும் இப்படம் கலெக்சனை அள்ளும் என்று கூறப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…
தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…
அமெரிக்காவிற்கு 'போர் அல்லது ஒப்பந்தம்' ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்…
90-களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மாளவிகா, தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில்…
தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls)…