Categories: சினிமா

நானும் மிஷ்கினும் ஒன்னா வேலப் பாத்திருக்கோம்.. ஆனா அவர் என்ன தெரியாத மாதிரி பேசுனாரு- பிரபல நடிகர் ஆதங்கம்!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். இவர் இயக்குனர்கள் கதிர் மற்றும் வின்செண்ட் செல்வா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின்  சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து அஞ்சாதே, நந்த லாலா, பிசாசு, சைகோ, துப்பறிவாளன் டேட் ஆப் பர்த் திரைப்படங்களை இயக்கினார். இவர் தன்னுடைய படங்களில் வித்தியாசமான திரைமொழியைக் கையாண்டு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வைத்துள்ளார். இவர் படங்களில் வசனங்களை விட காட்சிப்பூர்வமான அர்த்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.

அதனால் அவர் படக்காட்சிகளைப் பார்த்தாலே அது அவருடைய படம்தான் என்பதை ஒரு திரைப்பட பார்வையாளானால் புரிந்துகொள்ள முடியும். இப்படி மிஷ்கின் தொடர்ச்சியாக நல்ல படங்களைக் கொடுத்து வந்தாலும் சில நேரங்களில் அவர் சொதப்பியதும் உண்டு. தற்போது அவர் இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படம் ரிலீஸாகாமலும், ட்ரெய்ன் படம் இறுதி கட்டத்திலும் உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் பாட்டல் ராதா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசியது பெரியளவில் சர்ச்சைகளை உண்டாக்கியது. அந்த பேச்சில் அவர் சில கெட்டவார்த்தைகளையும், இளையராஜாவை ஒருமையிலும் பேசியது கண்டனங்களைப் பெற்றதை அடுத்து தனது பேச்சுக்காக மன்னிப்புக் கேட்டார்.   மிஷ்கின் பேச்சைக் கண்டித்துப் பேசியவர்களில் நடிகர் அருள்தாஸும் ஒருவர்.

இந்நிலையில் இப்போது அவர் மிஷ்கின் மேல் ஏன் அப்படிக் கோபப்பட்டேன் என்பது குறித்துப் பேசியுள்ளார். அதில் “எனக்கு மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை. அவருக்கும் எனக்கும் என்ன முன்பகையா? சினிமாக்காரர்கள் பேசுவதை வெளிநாட்டில் எல்லாம் குடும்பத்தோடு பார்க்கிறார்கள். இப்போது நாம் ஒன்று பேசினால் அது உலகம் முழுவதும் சென்றுவிடுகிறது. அதனால் பொறுப்புடன் பேசவேண்டும்.

மிஷ்கின், மிஷ்கின் ஆவதற்கு முன்னால் சண்முக ராஜாவாக இருந்த போதே அவரோடு இணைந்து நான் ‘ஜித்தன்’ படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளேன். அப்போது அவர் இணை இயக்குனர், நான் ஒரு பாட்டை மட்டும் படமாக்கிக் கொடுக்க சென்றேன். ஆனா இப்போது அவர் என்னைப் பற்றி பேசும்போது “யாரு அந்த நடிகர், அருள்தாஸா?” என்று கேட்கிறார். நான் சின்ன நடிகராகவே இருக்கிறேன். ஆனால் அவர் தன் பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டார். அதற்குத் தலை வணங்குகிறேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“அந்த ஒரு ரகசிய அறை.. பகலில் வீடு.. இரவில் விபச்சார விடுதி”…. 27 வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. திருச்சூரில் நடுங்க வைக்கும் உண்மை….!

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…

1 minute ago

“சுயமரியாதையுடன் விடைபெறுகிறோம்…!” – போட்டி முடிந்ததும் உடை மாற்றும் அறையில்… ஈரான் அணி செய்த அந்த நெகிழ்ச்சி காரியம்…!!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

5 minutes ago

விவாகரத்து கேஸை மறந்த கணவன்… பெட்ரூமில் காத்திருந்த அதிர்ச்சி… வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி செய்த காரியம்….!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணமாகி, 4½…

6 minutes ago

“நள்ளிரவில் நடந்த கொடூரம்… 12 வயது மகனின் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த அவலம்”… திருட வந்த கும்பல் செய்த நெஞ்சை பதறவைக்கும் காரியம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பட்நகர் பகுதியில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி நள்ளிரவில் அரங்கேறியுள்ள…

10 minutes ago

கழுகுப்பார்வையா இது..? கண்ணிமைக்கும் நேரத்தில்.. தண்ணீருக்குள் இருந்து தூக்கப்பட்ட பிரம்மாண்ட மீன்…! மிரண்டுபோன நெட்டிசன்கள்…!

விலங்குகளின் வேட்டைத் திறன் எப்போதுமே மனிதர்களை வியப்பில் ஆழ்த்தத் தவறுவதில்லை. காடுகளிலும் நீர்நிலைகளிலும் தினந்தோறும் அரங்கேறும் இந்த வாழ்வாதாரப் போராட்டங்கள்,…

12 minutes ago

“பணத்தைக் கொடுத்தா தான் வேலை!” சஸ்பெண்ட் ஆனவரிடமே ₹1.30 லட்சம் லஞ்சம். கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரி… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி…!!

சென்னையில் லஞ்ச விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஒழுங்கு நடவடிக்கை பிரிவு உதவியாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் அதிரடியாகக் கைது…

15 minutes ago