பழங்களின் சாறு உடலுக்கு நல்லது இல்லை… அதுக்கு பதிலா இதைப் பண்ணலாம்….

Spread the love

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மக்கள் தங்களது உடல் நலனில் பெரிதும் அக்கறை எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். சிலர் டயட் ஃபாலோ பண்ணவும் ஆரம்பித்து விட்டார்கள். நாம் உடல் எடையை குறைக்க வேண்டும், டயட் ஃபாலோ செய்ய வேண்டும் என்றால் ஒரு முறை மருத்துவரின் ஆலோசனையை கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் தங்களது இஷ்டம் போல் மக்கள் அவர்களது விருப்பப்படி டயட்டில் பாலோ செய்கின்றனர்.

டயட் உணவில் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் என்னதான் நல்லவைகளாக இருந்தாலும் அதில் சில விதிவிலக்குகள் இருக்கிறது. அப்படித்தான் ஒரு சில பழச்சாறுகளை குடிக்கக்கூடாது அது உடலுக்கு நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதைப் பற்றி இனி காண்போம்.

நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் இருப்பதால் பழங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. எப்போதுமே பழங்களை முழுதாக சாப்பிட வேண்டும். ஜூஸ் மற்றும் ஸ்மூத்திகளை குடிப்பதற்கு பதிலாக முழு பழத்தை சாப்பிடும்போது தான் அதனுடைய சத்துக்கள் அப்படியே கிடைக்கிறது என்று கூறுகிறார்கள். ஜூஸ் அல்லது ஸ்மூத்தியை தயாரிக்கும் போதே பெரும்பாலான நார்ச்சத்துக்கள், பழங்களை விட்டு சென்று விடுகிறது.

அதுமட்டுமல்லாமல் நாம் பழங்களை நன்றாக வாயில் போட்டு மென்று சாப்பிடும்போது சீக்கிரமே நம் வயிறு நிறைவது போல் உணர்வு ஏற்படும். இதுவே ஜூஸாகவோ ஸமூத்தியாகவோ குடிக்கும் போது அதை அதிக அளவில் எடுத்துக் கொள்கிறோம். இதனால் பழங்களில் இருக்கும் இயற்கையான அதிக அளவு சர்க்கரையும் கலோரிகளையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டி வருகிறது. இதை நாம் தொடர்ந்து செய்யும்போது நமக்கே தெரியாமல் நம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு அதிகரித்து விடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நீரழிவு நோய் இல்லாதவர்களுக்கு இது பெரிய பாதிப்பு ஏற்படுத்தாது என்றாலும் நாள் செல்ல செல்ல சிறிது சிறிதாக நம் உடம்பில் ரத்தத்தின் சர்க்கரை அளவை இது அதிகப்படுத்தும் என்றும் கூறுகிறார்கள். ஜூஸ் செய்யும்போது பல விதா சத்துக்கள் சென்று விடுகிறது அதனால் பங்களை துண்டு துண்டாக வெட்டி நாம் வாயில் அசைபோட்டு சாப்பிடும் போது அதனுடைய முழுமையான சத்துக்கள் நம் உடம்புக்கு கிடைக்கும் எனவும் நீண்ட நேரம் அதனுடைய சக்தி ஆற்றல் நமக்கு கிடைக்கும். டயட் பின்பற்றும் போது தை எந்த முறையில் நாம் செய்கிறோம் மிகவும் முக்கியமானது.

admin

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

4 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

4 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

4 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

5 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

5 மணத்தியாலங்கள் ago