கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மக்கள் தங்களது உடல் நலனில் பெரிதும் அக்கறை எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். சிலர் டயட் ஃபாலோ பண்ணவும் ஆரம்பித்து விட்டார்கள். நாம் உடல் எடையை குறைக்க வேண்டும், டயட் ஃபாலோ செய்ய வேண்டும் என்றால் ஒரு முறை மருத்துவரின் ஆலோசனையை கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் தங்களது இஷ்டம் போல் மக்கள் அவர்களது விருப்பப்படி டயட்டில் பாலோ செய்கின்றனர்.
டயட் உணவில் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் என்னதான் நல்லவைகளாக இருந்தாலும் அதில் சில விதிவிலக்குகள் இருக்கிறது. அப்படித்தான் ஒரு சில பழச்சாறுகளை குடிக்கக்கூடாது அது உடலுக்கு நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதைப் பற்றி இனி காண்போம்.
நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் இருப்பதால் பழங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. எப்போதுமே பழங்களை முழுதாக சாப்பிட வேண்டும். ஜூஸ் மற்றும் ஸ்மூத்திகளை குடிப்பதற்கு பதிலாக முழு பழத்தை சாப்பிடும்போது தான் அதனுடைய சத்துக்கள் அப்படியே கிடைக்கிறது என்று கூறுகிறார்கள். ஜூஸ் அல்லது ஸ்மூத்தியை தயாரிக்கும் போதே பெரும்பாலான நார்ச்சத்துக்கள், பழங்களை விட்டு சென்று விடுகிறது.
அதுமட்டுமல்லாமல் நாம் பழங்களை நன்றாக வாயில் போட்டு மென்று சாப்பிடும்போது சீக்கிரமே நம் வயிறு நிறைவது போல் உணர்வு ஏற்படும். இதுவே ஜூஸாகவோ ஸமூத்தியாகவோ குடிக்கும் போது அதை அதிக அளவில் எடுத்துக் கொள்கிறோம். இதனால் பழங்களில் இருக்கும் இயற்கையான அதிக அளவு சர்க்கரையும் கலோரிகளையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டி வருகிறது. இதை நாம் தொடர்ந்து செய்யும்போது நமக்கே தெரியாமல் நம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு அதிகரித்து விடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
நீரழிவு நோய் இல்லாதவர்களுக்கு இது பெரிய பாதிப்பு ஏற்படுத்தாது என்றாலும் நாள் செல்ல செல்ல சிறிது சிறிதாக நம் உடம்பில் ரத்தத்தின் சர்க்கரை அளவை இது அதிகப்படுத்தும் என்றும் கூறுகிறார்கள். ஜூஸ் செய்யும்போது பல விதா சத்துக்கள் சென்று விடுகிறது அதனால் பழங்களை துண்டு துண்டாக வெட்டி நாம் வாயில் அசைபோட்டு சாப்பிடும் போது அதனுடைய முழுமையான சத்துக்கள் நம் உடம்புக்கு கிடைக்கும் எனவும் நீண்ட நேரம் அதனுடைய சக்தி ஆற்றல் நமக்கு கிடைக்கும். டயட் பின்பற்றும் போது அதை எந்த முறையில் நாம் செய்கிறோம் மிகவும் முக்கியமானது.